“மோர் மிளகாய் வத்தல்” இப்படி செய்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்!!

0
68
"Buttermilk chilli paste" will not spoil for a long time if done this way!!

“மோர் மிளகாய் வத்தல்” இப்படி செய்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்!!

வத்தல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.இதில் பல வகை இருக்கிறது.தயிரில் பச்சை மிளகாய் போட்டு ஊற வைத்து பின்னர் அதனை நன்கு காய வைத்து செய்யப்படும் மோர் மிளகாய் வத்தல் சுவையாக இருக்கும்.தயிர்’சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இந்த மோர் மிளகாய் வத்தல் இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*பச்சை மிளகாய் – 30

*புளிப்பு தயிர் – 1 கப்

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் எடுத்து வைத்துள்ள பச்சை மிளகாயை அதில் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து இந்த பச்சை மிளகாயை சிறிது கீறல் பூட்டு கொள்ளவும்.பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் புளித்த தயிர் ஊற்றிக் கொள்ளவும்.இதை மோர் பதத்திற்கு கொண்டு வந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை அதில் போட்டு 1 இரவு முழுவதும் நன்கு ஊற விடவும்.
அடுத்த நாள் காலையில் ஊறவைத்துள்ள மிளகாயை ஒரு தட்டிற்கு மாற்றி 1 நாள் முழுவதும் வெயிலில் வைக்கவும்.

பிறகு மாலை நேரத்தில் காயவைத்த மிளகாயை மீண்டும் அதே தயிரில் சேர்த்து ஊறவைக்கவும்.
பின்னர் அடுத்த நாள் காலையில் மீண்டும் ஊறவைத்துள்ள மிளகாயை ஒரு தட்டிற்கு மாற்றி 1 நாள் முழுவதும் வெயிலில் வைக்கவும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் வரை செய்யவும்.

மிளகாயில் உள்ள ஈர்த் தன்மை முற்றிலும் நீங்கி நன்கு காய்ந்த பிறகு இதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

மோர் மிளகாய் வற்றல் பொரிக்கும் முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் மிளகாய் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

அவை சூடேறியதும் மிதமான தீயில் தயார் செய்து வைத்துள்ள மோர் மிளகாயை அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.இந்த மோர் மிளகாய் வற்றல்,தயிர் சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.