கடன உடன வாங்கி வயிற்ற கழுவுகிறோம்! நாட்டுப்புற கலைஞர்களின் குமுறல்! செவிக்கொடுக்குமா தமிழக அரசு?

0
165
Buy with credit and wash the stomach! The roar of folk artists! Will the Tamil Nadu government listen?

கடன உடன வாங்கி வயிற்ற கழுவுகிறோம்! நாட்டுப்புற கலைஞர்களின் குமுறல்! செவிக்கொடுக்குமா தமிழக அரசு?

இந்த நவீன காலக்கட்டத்தில் நாட்டுப்புற கலைகள் அழிந்துக்கொன்டே வருகிறது.அந்தவகையில் கடலூர் மாவட்டத்தில் தெருக்கூத்து,பம்பை உடுக்கை,நையாண்டி மேளம்,மேடை நாடகம் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.இந்த கலைத்தொழில் மூலம் அவர்களுக்கு வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே வேலை இருக்கும்.குறிப்பாக பண்டிகை நாட்களில் மட்டுமே அவர்களுக்கு வேலைகள் இருக்கும்.

அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் மத்திய அரசு ஊரடங்கை நிறுவியது.இதனால் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இன்றி வாழ்க்கை நடத்துவதே பெரும் சவாலாக இருந்தது.அந்த ஆண்டு சென்று இந்த ஆண்டு வந்தால் இந்த ஆண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.திருவிழாக்கள் என அனத்திற்கும் தடை விதித்துள்ளனர்.இதனால் இந்த வருடமும் நாட்டுப்புறகலைஞர்களின் வாழ்வாதாரம் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அதனால் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர் சங்கம் கடலூர் மாவட்டக் கிளை சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நாடக நடிகர்கள் வேடமணிந்து,பாரம்பரிய இசையான பாம்பை,உடுக்கை,நையாண்டி,மேளம்,பறை போன்ற நாட்டுப்புற இசை வாத்தியங்களை இசைத்து ஆட்டம் ஆடி,பாடல்கள் பாடி,ஊர்வலமாக சென்றனர்.

அவ்வாறு ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கூறியதாவது,இப்போது தான் திருவிழாக்கள் தொடங்க உள்ளது.சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கினால் நாங்கள் வேலை வாய்புகள் இன்றி,எங்கள் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது.இந்த வருடமும் நீங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளீர்கள்.சென்ற வருடமே நாங்கள் கட உடன வாங்கி வயிற்றைக் கழுவினோம்.

இந்த ஆண்டும் இவ்வாறு அமைந்துவிடும் போல தெரிகிறது.அதனால் தமிழக அரசு மற்ற நிகழ்சிகளுக்கு 50% அனுமதி தந்துள்ளதுப்போல எங்கள் நிகழ்சிகளுக்கும் அனுமதி தர வேண்டும்.கொரோனா நாட்டுப்புற விழிப்புணர்வு நிகழ்சிகளை கொண்டுவரவும் அரசாங்கம் முன் வர வேண்டும்.இதனையெல்லாம் மேற்கொண்டாள் தான் கலைஞர்களின் குடும்பங்கள் உயிர் பிழைக்கும்.

கடந்த ஆண்டு தமிழக அரசாங்கம் மூன்றில் ஒரு பங்கு கலைஞர்களுக்கு மட்டுமே ரூ.2000 அளித்தது.மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை.அதுமட்டுமின்றி வாழ்வாதாரத்திற்கு அந்த பணம் போமானதாகவும் இல்லை.அதனால் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி தர வேண்டும்,இல்லையென்றால் கலை பண்பாட்டுத் துறையில் அடையாள அட்டை மற்றும் நலவாரிய புத்தகம் வைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் மாதம் ரூ.10000 வழங்க வேண்டும் என கூறினார்கள்.இவர்களின் குமரல்களுக்கு தமிழக அரசாங்கம் செவிக்கொடுக்குமா? என்பது காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.