Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சொத்தை எழுதி வாங்கிவிட்டு கைவிட்ட கொடுமை!! ஸ்டரச்சர் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த மூதாட்டி!!

#image_title

சொத்தை எழுதி வாங்கிவிட்டு கைவிட்ட கொடுமை!! ஸ்டரச்சர் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த மூதாட்டி!!

கரூர், ஜவஹர் பஜார் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது பராமரிப்பில் அக்கா சரஸ்வதி (வயது 85) படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவரை இவரது உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் நாள் கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.

ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டரச்சரில் படுக்க வைத்து கூட்டம் நடைபெறும் அறைக்கு தள்ளிக் கொண்டு சென்று ஆட்சியரை சந்திக்க முற்பட்டனர்.

அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விசாரித்ததுடன், கூட்டரங்கில் இருந்த தனி துணை ஆட்சியர் சைபுதீனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து அவர் வெளியில் வந்து மூதாட்டியை பார்த்து, மனுவை வாங்கிச் சென்றார். மூதாட்டிக்கு கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாததால் தம்பியின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

மூதாட்டிக்கு சொந்தமான 2318 சதுர அடி இடத்தை உறவினர் ஜான்சிராணி என்பவர் மூதாட்டியை கடைசி வரை பார்த்து கொள்வதாக கூறி தானம் எழுதி வாங்கிக் கொண்டாத கூறப்படுகிறது.

ஆனால், அவரை பார்த்துக் கொள்ளமால் ஜான்சி ராணி வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரின் உறவினர்கள் பராமரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரிடம் தானம் எழுதி வாங்கிய சொத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version