வீட்டு பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல செல்வமும் கிடைக்கும்!!
வீட்டில் உள்ள பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கி சகல செல்வமும், சௌபாக்கியமும் நிறையும். தெய்வ கடாட்சம் கிடைக்கும்.
சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்கு பார்த்த மாட்டி வைப்பதால் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் சிறிது சிறிதாக நீங்கும்.
செவ்வாய்,வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். அமாவாசை, பௌர்ணமி மற்றும் வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்யலாம்.
சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களே சூடாதீர்கள். வாசனை மிக்க பூக்கள் பூஜைக்கு உகந்தது.
வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் சிறந்தது.
அதிகாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் தீபம் ஏற்றுவது நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.
பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஓம் என்ற மந்திரத்தை தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட வினைப் பயனும் நெருங்காது.
தினமும் காலையில் ருத்ரம், சமகம் போன்றவற்றை கேட்பது நல்லது.
பூஜை அறையில் தெய்வப் படங்களை வடக்கு பார்த்து வைத்தல் கூடாது. சுப்ரபாதத்தை காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும்.
தீபத்தில் உள்ள திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தீபம் ஏற்றும் முன் வீட்டின் பின் வாசல் இருந்தால் அந்த கதவை சாத்தி விட வேண்டும்.