Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூன்று மாதம் கருவேப்பிலை உண்பதால்!! வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சனையும் கிடையாது!!

மூன்று மாதம் கருவேப்பிலை உண்பதால்!! வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சனையும் கிடையாது!!

கருவேப்பிலை பல மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இலங்கை போன்ற நாடுகளில் சமைப்பதற்கு பல விதமான உணவுக்கு சுவை கூட்டும் பொருளாகவும், மணத்திற்காகவும் பிரசித்தி பெற்றவையாகும். இதன் தாவரவியல் பெயர், முறயாகொயிங்கீ என்றழைக்கப்படுகின்றது. இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயன் உள்ளவை. (இலை, ஈர்க்கு. பட்டை, வேர்) வாசனைப் பொருளாக மட்டுமின்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் என பல ரகங்கள் உள்ளன.

கருவேப்பிலை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

சுவையின்மை, பசியின்மை,

கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வை பிரச்சனை விரைவில் குணமடையும்.

செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டை பிரச்சனை ஆகிய பிரச்சனைகள் குணமாகிறது. மேலும் நரையற்ற உரோமம் ஆகியவற்றைப் பெற முடியும் மற்றும் நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

அதனைத் தொடர்ந்து வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமன் தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். மேலும் இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கி கருப்பு முடி உருவாகும்.

Exit mobile version