குடியுரிமை சட்ட மசோதா மீண்டும் ரயில் மறியல்?

0
100

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் போராட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். தர்பங்கா மாவட்டம் லகரிசராய் ரெயில் நிலையத்திற்குள் திடீரென சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அங்கு நின்றிருந்த ரெயிலை புறப்பட விடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. ஜனவரி 22ம் தேதிக்குள் விரிவான விளக்க அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.