தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மழை வெள்ள பாதிப்பு காரணமாக, ஆலோசனை செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் தொடர் மழை காரணமாக, அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது முதலில் நேற்று மாலை 5 மணிக்கு கூட இருந்த இந்த அமைச்சரவை கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் மழை காரணமாக, ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
கனமழையின் அறிவிப்பு காரணமாக, நேற்று நடைபெற இருந்த அமைச்சரவை கூட்டம் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.