Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குஜராத் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விபத்து! 60 பேர் பலியான சோக சம்பவம்

குஜராத் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விபத்து! 60 பேர் பலியான சோக சம்பவம்

குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றிலுள்ள கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 60 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர்.அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து சத்பூஜைக்கு சென்றபோது நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் புணரமைப்பு பணிகள் முடிந்து இந்த பாலம் திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வார விடுமுறை தினம் மற்றும் திருவிழா என்பதால் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்வையிட அதிகம் திரண்டனர் என்று கூறப்படுகிறது. இதனால் பாரம் தாங்காமல் இவ்விபத்து நடந்திருக்கலாம் என்றும் அங்குள்ள உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version