Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

SPAM கால் வந்தால் உடனே இந்த உதவி எண்ணிற்கு அழைக்கவும்!!

Call this helpline immediately if you get a SPAM call!!

Call this helpline immediately if you get a SPAM call!!

மொபைல் எண்களுக்கு போலியாக வரும் அழைப்புகள் தொடர்பாக சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்க வேண்டும்.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI தொலைதொடர்பு விதிகளில் மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் அமுலுக்கு வந்தது. இந்த புதிய விதியின் படி அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் செல்போன்களில் பெறப்படும் தகவல்களை கண்காணிப்பதை மேம்படுத்துவதற்காக செயகளைக் கண்டறியும் திறனை message traceability செயல்படுத்த வேண்டும். இது பயனாளர்களின் விளம்பரச் செய்திகளை மற்றும் அழைப்புகளை அடையாளம் காணவும் மற்றும் மோசடி அபாயத்தை தவிர்க்கவும் வழிவகை செய்கிறது.

இதுபோன்ற அழைப்புகளுக்கு, சஞ்சார் சாத்தி (www.sancharsaasthi,gov.in) என்ற இணையதளத்தில் சந்தேகத்திற்குரிய மோசடி தகவல்தொடர்புகளைப் புகாரளிப்பதன் மூலம் உதவலாம். ஏற்கனவே பணத்தை இழந்தவர்கள் அல்லது இணைய வழி குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இது குறித்து சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது https://www.cybercrime.gov.in இணையதளத்தில் புகாரளிக்கவும்.

Exit mobile version