Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“காவல் நாய்களே” என போலீசாரை கூறுவது களங்கம் விளைவிக்கும்.. உங்கள் ஆளும் கட்சியை கண்டியுங்கள்- முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!!

Calling the police "police dogs" is stigmatizing.. Condemn your ruling party- Annamalai warns CM!!

Calling the police "police dogs" is stigmatizing.. Condemn your ruling party- Annamalai warns CM!!

“காவல் நாய்களே” என போலீசாரை கூறுவது களங்கம் விளைவிக்கும்.. உங்கள் ஆளும் கட்சியை கண்டியுங்கள்- முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிகளை கையில் ஏந்திய படி காவல்துறையினரை அவதூறாக பேசி கோஷமிட்டதை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் முதல்வரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில் கோரிக்கை வைத்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,

காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், “காவல் நாய்களே”, “எச்சைப் பிழைப்பு”, போன்ற கோஷங்களை எழுப்புவது காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை இதுபோன்ற அரசியல் கட்சிகள் உணர வேண்டும்

ஓரிரு காவலர்கள் செய்யும் தவறுகளுக்கு, ஒட்டு மொத்த காவல்துறையினரை அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. தங்களது உயிரை துச்சமாகக் கருதி, மக்களை காக்க உழைக்கும் காவல்துறையினரை, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும்,இது போன்று அவதூறாகப் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில் கோஷங்களை எழுப்பும் தங்களது கூட்டணி கட்சியினர் மேல், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள

@CMOTamilnadu உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Exit mobile version