சர்வதேச அழைப்புகள் வருகிறதா? சைபர் ஸ்கேம் காலாக இருக்கலாம்.. மத்திய அரசு எச்சரிக்கை!!

0
97
Calls from +8, +85, +65 may be cyber scams, Central Department warns

Cybercrime: +8,+85,+65 ஆகிய எண்களில் இருந்து வரும் அழைப்புகள் சைபர் ஸ்கேமாக இருக்கலாம் மத்திய துறை எச்சரிக்கை.

இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் தனிப்பட்ட நபரின் வங்கி விவரங்கள் பெறுவதற்காக வங்கி நிர்வாகி போல தொலைபேசி அழைப்புகளில் பேசி வங்கியில் உள்ள பணத்தை திருடுவதற்கான விவரங்களைப் பெற்றுக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இது மட்டுமல்லாமல், தனிப்பட்ட நபரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அந்த புகைப் படத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி புகைப்படத்தை பணம் கொடுக்காவிட்டால் இணையத்தில் வெளியிடுவோம் என கூறி பண மோசடியில் ஈடுபடுவார்கள். பொது மக்களின் ஆசையை தூண்டி அதன் வாயிலாக பணம் திருடுவார்கள் இது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை குறைத்திட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஒருவர் மற்றவருக்கு தொலைபேசியில் அழைப்பு மேற்கொள்ளும் போது சைபர் கிரைம் எச்சரிக்கை குறித்த ஆடியோ வருவது போல வசதியை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் புது வித ஸ்கேம் பற்றிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதில். +8,+85,+65 ஆகிய எண்களில் தொடங்கும் சர்வதேச அழைப்புகள் உங்களுடைய தொலைபேசிக்கு வந்தால் அது ஸ்கேம் காலாக இருக்கலாம் என அறிவித்து இருக்கிறது.

இது போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடும்  நபர்கள் +91 என்ற எண்ணில் தொடங்கும் இந்திய தொலைபேசி எண்களை பயன்படுத்த முடியாமல் முடக்கி வைத்து இருக்கிறது. தற்போது சர்வதேச எண்களை பயன்படுத்தி சைபர் குற்றங்களில் ஈடுபடலாம் என இந்திய தொலை தொடர்பு துறை அறிவித்துள்ளது.