Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டி 20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் விலகல்… புதுசா வந்திருக்கும் அதிரடி ஆட்டக்காரர்!

டி 20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் விலகல்… புதுசா வந்திருக்கும் அதிரடி ஆட்டக்காரர்!

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.

டி 20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி சிலவாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஜோஷ் இங்லிஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணியில் ஜோஷ் இங்கிலிஸுக்கு காயம் அடைந்த நிலையில் கேமரூன் கிரீன் அவருக்கு பதிலாக இடம்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய கீப்பர் மேத்யூ வேடுக்கு பேக்-அப் விக்கெட் கீப்பர் இல்லாமல் ஆஸ்திரேலியா இருக்கும்.

சிட்னியில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் இங்கிலிஸ் கையில் காயம் ஏற்பட்டு வெளியேறினார், அதன்பிறகு உள்ளூர் மருத்துவ வசதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு இப்போது அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த காயம் உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளுக்கு அவரை வெளியேற்றுகிறது.

ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் கிரீனின் ஆல்ரவுண்ட் திறன்களைக் கருத்தில் கொண்டு அவரை அணியில் இணைத்துள்ளனர். ஆஸ்திரேலியா அணியில் ஏற்கனவே இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரூன் கிரீன் அதிரடி ஆட்டத்துக்கு பேர்போனவர். இந்தியாவுக்கு எதிரான சமீபத்தில் நடந்த டி 20 போட்டியில் தனது வானவேடிக்கை ஆட்டத்தின் மூலம் அவர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். அவரின் கூடுதல் திறமையாக பவுலிங்கிலும் அவர் சிறப்பாக வீசக்கூடியவராக அமைந்துள்ளார்.

Exit mobile version