Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!

#image_title

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!

நம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி அவதிப்பட்டு வரும் பாதிப்புகளில் ஒன்று சளி,இருமல்.இவை பொதுவாக மழைக்காலங்களில் அதிகளவில் ஏற்படுகிறது.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இந்த சளி,மூக்கடைப்பு,இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக கற்பூரவள்ளி இருக்கிறது.இதை கஷாயமாகவோ,துவையலாகவோ,பானமாகவோ எடுத்து வந்தோம் என்றால் சளி,இருமல் பாதிப்பு நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த கற்பூரவள்ளி இலைகளில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ இருக்கிறது.இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதுமட்டுமின்றி இந்த கற்பூரவள்ளி இலை செரிமான கோளாறு,கீல்வாதம்,மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளையும் சரி செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரவள்ளி – 15 இலைகள்

*நல்லெண்ணெய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

*உளுந்து பருப்பு – 2 தேக்கரண்டி

*வர மிளகாய் – 4 முதல் 5

*கடுகு – 1 தேக்கரண்டி

*தேங்காய் – 1/2 மூடி(நறுக்கியது)

*சின்ன வெங்காயம் – 10

*இஞ்சி – சிறு துண்டு

*பூண்டு – 6 பற்கள்

*புளி – ஒரு எலுமிச்சை பழம் அளவு

*பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

1)அடுப்பில் கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் எண்ணெயை ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் கடுகு,உளுந்து பருப்பு சேர்த்து பொரிய விடவும்.

2)பின்னர் அதில் வர மிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம்,பொடியாக நறுக்கிய தேங்காய்,இஞ்சி,பூண்டு மற்றும் புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

3)பிறகு அதில் 15 கற்பூரவள்ளி இலை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.பிறகு அடுப்பை அணைக்கவும்.அதன் பின் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து கிளறி நன்றாக ஆறவிடவும்.

4)பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவைத்துள்ள பொருட்களை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

5)அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் உளுந்து,கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.இதை அரைத்து வைத்துள்ள கற்பூரவள்ளி துவையலுடன் கலந்து கொள்ளவும்.

Exit mobile version