ஒரு லட்சத்திற்கு விற்ற குழந்தையை 10,000 ரூபாய்க்கு கேட்டால் திரும்ப தர முடியுமா?

0
116

தெலுங்கானாவில் ஒரு தம்பதியினர் மூன்று குழந்தைகளுக்கு மேல் போனதால் சமாளிக்க முடியாமல் ஒரு குழந்தையை விற்று விட்டு மறுபடியும் மனம் திருந்தி திரும்ப கேட்ட பொழுது ஒரு லட்சத்திற்கு விற்ற குழந்தையை 10,000 ரூபாய்க்கு கேட்டால் தர முடியுமா? என்று செவிலியர் பிரச்சனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பூபால் பள்ளி என்ற வசித்து வரும் இளம் தம்பதியருக்கு கடந்த ஜூன் மாதம் என்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு 3 குழந்தை இருந்ததால் சமாளிக்க முடியாது என நினைத்து பெற்றோர்கள் இந்த குழந்தையை விற்று உள்ளனர். அதற்கு பத்தாயிரம் ரூபாய் வாங்கி கொண்டுள்ளனர்.

பின் மிகவும் குழந்தையை நினைத்து வருந்திய நிலையில் மீண்டும் அந்த மருத்துவ மனைக்கு வந்து குழந்தையை திரும்ப கேட்டுள்ளனர். அப்பொழுது அந்த செவிலியர் ஒருவருக்கும் இவர்களுக்கும் வாக்கு வாதம் வந்துள்ளது.

அதில் அந்த செவிலியர் உங்கள் குழந்தையை 1.15 லட்சத்திற்கு விற்றோம் இப்பொழுது 10000 குடுத்து திரும்ப கேட்டால் எப்படி தருவது என சண்டையிட்டுள்ளர்.

இதனால் அந்த தம்பதியினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்று கொண்ட போலீசார் செவிலியர் மற்றும் மருத்துவ உதவி பணியாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையை பெற்றோரிடம் திரும்ப பெற்று தந்துள்ளனர்.