Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா?

#image_title

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா?

காக்கைக்கு உணவு வைத்து விட்டு பின்னர் நாம் சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் காக்கைக்கு உணவு வைப்பது எதனால்? என்ன காரணம்? என்று யோசித்து இருக்கிறீர்களா?

காக்கைக்கு உணவு வைத்தால் பல சாபம், கர்ம வினைகள் நீங்கும். அதுமட்டும் இன்றி நம் ஆயுள் அதிகரிக்கும்.

காகத்திற்கு உணவு வைத்து வந்தால் நமக்கு ஏற்பட்டு இருக்கும் பித்ரு தோஷத்தில் இருந்து எளிதில் நீங்கி விடலாம். அதுமட்டும் இன்றி கர்ம வினைகளின் தீவிரத்தில் இருந்து தப்பி விட முடியும்.

வீட்டில் நிம்மதி, மகிழ்ச்சி உண்டாகும். நம் முன்னோர்கள் சாபம் எளிதில் நீங்கி விடும். காகத்திற்கு ஒருபோதும் அசைவ உணவு வைக்கக் கூடாது. அதேபோல் நீங்கள் சாப்பிட்ட சாதத்தை வைக்கக் கூடாது.

சாப்பிடுவதற்கு முன்னர் தங்கள் கைகளால் ஒரு உருண்டை பிடித்து சைவ உணவாக வைக்க வேண்டும்.

காக்கைக்கு உணவு வைப்பதினால் சனி பகவான் இரக்கம் நமக்கு கிடைக்கும். கடன் தீர்ந்து போகும். நவ கிரகங்களின் ஆசி முழுவதுமாக கிடைக்கும்.

Exit mobile version