சமீப காலமாகவே சிக்கன் சம்பந்தப்பட்ட உணவு வகைகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த விலையில் அதிக புரோட்டின் கிடைப்பதால் இதனை டாக்டர்களும் பரிந்துரைத்து வருகின்றன. கோழி இனத்தை ஒருவகை வைரஸ் தாக்கி அதனால் கோழி சேதம் ஏற்பட்டால் அதுவே பறவை காய்ச்சல். பறவை காய்ச்சலால் பெரும்பாலும் கோழிகளுக்கு உயிர் சேதம் ஏற்படாது. அதனுடைய பலவீனத்தை பொருத்தே அது உறுதி செய்யப்படும். பறவைக் காய்ச்சல் தாக்கம் ஏற்பட்ட கோழிகள் நலிவுற்று, இறக்கைகள் வளராததால் நோய் எதிர்ப்பு சக்தி அற்று இறந்திட நிகழும். பலருக்கும் இப்பொழுது, மனிதர்களுக்கு இந்த நோய் பரவுமா? என்ற கேள்வி எழும்.
பறவை காய்ச்சல் நோய் பெரும்பாலும் மனிதர்களுக்கு பரவுவதில்லை. வைரஸ் தாக்கல் ஏற்பட்ட கோழியை தொடும் போது, நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாக இருப்பேன் இது வர வாய்ப்பு உண்டு. மேலும் இதனை சமைக்கும் போது 75 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக சூடு ஏற்றி நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். சமீபாலமாகவே கோழிகளுக்கு H5N1 என்ற புதிய வகை வைரஸ் நமக்கு அண்மை மாநிலமான ஆந்திராவிலும், மகாராஷ்டிராவிலும் அதிகம் பரவி வருகின்றது. இதனால் கோழிகளை வெளியில் வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும். முட்டைகளையும் நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.