பெண்களின் உடலில் கருப்பை ஒரு இனப்பெருக்க உறுப்பாக உள்ளது.இந்த கருப்பையின் வாயில் உயிர் அணுக்களின் அசாதாரண வளர்ச்சியால் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.கடந்த சில வருடங்களாக கருப்பை வாய் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த கருப்பை வாய் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கணிக்க முடியாது.இதனால் இந்த நோய் பாதிப்பின் முற்றிய நிலையில் பெண்கள் மருத்துவரை நாட வேண்டிள்ளது.கருப்பை வாயை புற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்க பெண்கள் சில விஷயங்கள் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.
கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்:-
1)யோனி பகுதியில் கடுமையான துர்நாற்றம்
2)உடலுறவிற்கு பிறகு அதிக இரத்தப்போக்கு
3)இடுப்பு பகுதியில் கடுமையான வலி
4)மாதவிடாய் காலத்தை தவிர்த்து இடையில் இரத்தப்போக்கு ஏற்படுதல்
கருப்பை வாய் புற்றுநோய் காரணங்கள்:-
1)பாதுகாப்பில்லாத உடலுறவு
2)பிறப்புறுப்பு பகுதியில் நோய் தொற்று பரவல்
3)HPV வைரஸ்
கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வழிகள்:
1.கருப்பை சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க HPV தடுப்பூசியை பெண்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்.
2.கருப்பை சோதனையை மேற்கொள்ள வேண்டும்.பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ள வேண்டும்.
3.ஆண்கள் பாதுகாப்பு உறை அணிந்து உடலுறவில் ஈடுபட வேண்டும்.பெண்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.
4.ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
5.பெண்கள் உடலுறவிற்கு பிறகு பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இந்த கருப்பை வாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையில் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளலாம்.இதன் பாதிப்பு தீவிரமான நிலைக்கு சென்ற பின்னர் கதிரியக்க சிகிச்சை மூலம் குணப்படுத்திக் கொள்ளாலாம்.