Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீரிழிவு நோயாளிகள் கோடை காலத்தில் நன்னாரி சர்பத் பருகலாமா? இந்த விஷயத்தை மறந்தும் செய்திடாதீங்க!!

வெயில் காலத்தில் நன்னாரி சர்பத் மிகவும் பிரபலமான பானமாக இருக்கின்றது.வெளியில் செல்பவர்கள் தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தை வாங்கி ருசிபார்த்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றனர்.

இந்த நன்னாரி சர்பத் நம் தென் இந்தியாவில் கிடைக்கும் பானமாகும்.நன்னாரி என்பது ஒரு தாவரம்.இந்த தாவரத்தின் வேரை காயவைத்து சர்பத் செய்ய பயன்படுத்துகின்றனர்.கடைகளில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் இதர குளிர்பானங்களை காட்டிலும் நன்னாரி சர்பத் மருத்துவ குணம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அதேபோல் நன்னாரி சர்பத்தில் கலோரிகள்,கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்து அதிகமாக இருக்கின்றது.

மேலும் நன்னாரி வேர் உடல் வெப்பத்தை குறைக்கவும் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது.நன்னாரி சர்பத் பருகினால் ஒற்றைத் தலைவலி,மூட்டு வலி,சருமப் பிரச்சனைகள் அனைத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

கோடை காலத்தில் உடலில் தேங்கும் அதிகப்படியான கெட்ட கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் மற்றவர்களை போன்று நன்னாரி சர்பத் எடுத்துக் கொள்வது ஆபத்தான விஷயமாகும்.

நன்னாரி சர்பத்தில் உள்ள சர்க்கரை உடலில் குளுக்கோஸ் அளவை உயர்த்திவிடும்.எனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள் நன்னாரி சர்பத்தில் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.நன்னாரி சர்பத் மட்டுமின்றி எந்த ஒரு திரவ உணவுகளிலும் அதிக சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் பானங்களில் ஐஸ் கியூப்ஸ் சேர்த்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இதனால் வயிறு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

நன்னாரி சர்பத் செய்முறை:

கடைகளில் நன்னாரி எசன்ஸ் கிடைக்கும்.அதை போதுமான அளவு வாங்கிக் கொள்ள வேண்டும்.அதன் பின்பு தண்ணீரில் தேவையான அளவு நன்னாரி எசன்ஸ்,எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.இதில் குறைவான அளவு தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.இந்த சர்பத்தை அடிக்கும் வெயிலில் பருகினால் உடல் சூடு அப்படியே குறைந்துவிடும்.

Exit mobile version