Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை நோயாளிகள் “பழைய சோறு” சாப்பிடலாமா? சந்தேங்கங்களுக்கு தீர்வு!!

#image_title

சர்க்கரை நோயாளிகள் “பழைய சோறு” சாப்பிடலாமா? சந்தேங்கங்களுக்கு தீர்வு!!

30 ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை நோய் என்றால் அது பணக்கார வியாதி என்று பார்க்கப்பட்டது.அது பணக்காரர்களை மட்டும் தாக்கும் நோய் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் நிலவி வந்தது.ஆனால் காலம் கடக்க கடக்க பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் பாதிக்கும் நோயாக இது மாறிவிட்டதுஇதற்கு முக்கிய காரணம் இயற்கை முறை மாற்றம் மட்டுமே.

நம் தாத்தா,பாட்டி காலத்தில் சத்தான உணவுகள் விளைவிக்கப்பட்டு உண்ணும் பழக்கம் இருந்தது.இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் பாதிப்பு குறைந்தது.உதாரணத்திற்கு அரிசியை எடுத்து கொள்ளலாம்.அன்றைய காலத்தில் அரிசி விளைவிக்க குறைந்தது 6 மாதங்கள் ஆகும்.அப்பொழுது விளைவித்து உண்ட அரிசி வேறு.அதிக சத்துக்களை கொண்டிருந்தது.

ஆனால் இன்றைய விவசாயத்தில் அரிசியை விளைவிக்க 2 1/2 மாதங்கள் போதும்.அந்தளவிற்கு விவசாயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டது.இதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகை.இதனால் உணவு பற்றாக்குறை வந்துவிட கூடாது என்பதற்காக குறுகிய காலத்தில் அனைத்து வகை பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு விடுகிறது.அதுமட்டும் இன்றி இந்த பொருட்களை உற்பத்தி செய்ய பலவித ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.

இவை மனிதர்கள் விரைவில் நோய் பாதிப்புகளை சந்திக்க வழி வகுக்கிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அரிசி பயன்பாட்டை விட ராகி,கம்பு,தினை உள்ளிட்ட சிறுதானிய பயன்பாடு அதிகம் இருந்தது.இவை அரிசியை விட சுவை குறைவாக கொண்டிருந்தாலும் சத்துக்கள் மிகுந்து இருக்கிறது என்பது தான் இதன் சிறப்பு.

ஆனால் நவீன காலத்தில் சிறுதானிய பயன்பாடு குறைந்து அரசி உணவு அதிகரித்து விட்டதால் கூடவே நோய்களும் அதிகரித்து விட்டது.அப்போ அரிசி கெடுதல் தரக்கூடிய உணவா? என்றால்ஆம் இன்றைய காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான அரிசி வகைகள் உடலுக்கு கெடுதல் தரக் கூடியவையாகத் தான் இருக்கிறது.நம் முன்னோர்கள் விவசாயத்தில் உருவான அரசி மட்டுமே ஆரோக்கியமானது.இப்பொழுது விளைவிக்கப்படும் அரசி அனைத்தும் பாலிஷ் செய்யப்பட்டு வருவததால் அவற்றை உண்ணும் பொழுது உடலில் சர்க்கரை அளவு கூடிவிடும்.

அரிசி உணவை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்த காரணமும் இதுவே.சர்க்கரை நோய் இருப்பவர்கள் அரசி உணவை அதிகளவில் எடுத்துக் கொள்வதை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது.இப்படி சூடு சாதத்தையே தவிர்ப்பது நல்லது என்று சொல்லும் பொழுது பழைய சோறு மட்டும் விதி விலக்கா என்ன? பாரம்பரிய மிக்க சத்தான அரிசி,இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது என்றால் அளவாக எடுத்து கொள்ளலாம்.

அதில் பழைய சாதம் செய்து சாப்பிடலாம்.அதை தவிர மற்ற அரிசிகளை அதிகம் ருசிபார்ப்பதை சர்க்கரை நோயாளிகள் நிறுத்து கொள்ள வேண்டும்.குறிப்பாக அந்த அரிசியில் உருவாகும் நொதித்த பழைய சாதத்தை குடிப்பதை அறவே நிறுத்தி விடுவது நல்லது.

Exit mobile version