Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு இவ்வளவு பயன்கள் உண்டாகுமா? என்ன ஒரு மாயாஜாலம்!

தினமும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு இவ்வளவு பயன்கள் உண்டாகுமா? என்ன ஒரு மாயாஜாலம்!

அக்காலத்தில் நம் முன்னோர்கள் அனைவரும் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தார்கள்.இதனால் அவர்களுடைய உடல் ஆரோக்கியமாக இருந்தது.ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக மாறி விட்டது.உடலில் யாருக்கு என்ன நோய் இருக்குதென்றே தெரியாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.காரணம் வாழ்க்கை மற்றும் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டது.நம் அன்றாட வாழ்வில் சத்தான உணவு என்பது அரிதாகிவிட்டது.

அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.ஆனால் இன்று நாம் பிளாஸ்டிக் குடம்,பாட்டில்களில் நிரப்பப்பட்ட தண்ணீரை அருந்தி வருகிறோம்.இதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி யாரும் அறிவதில்லை.இந்நிலையில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் பயன்கள் பற்றி தெரிந்தால் இனி பிளாஸ்டிக் பொருட்களை ஒதுக்கி வைத்து விடுவீர்கள்.

1.தினமும் செம்பு அதாவது காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தி வந்தோம் என்றால் உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெறும்.

2.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இருமல்,இரைப்பு  நோய் வராது.

3.செம்பு இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்த நமக்கு பெரிதும் உதவுகிறது.இதனால் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குறைகிறது.

4.இதய எரிச்சல்,இருமல்,சளி போன்றவை குறைய இது மிகவும் உதவுகிறது.

5.இந்த செம்பு தாது உடலில் நல்ல இரத்த அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை ஆகும்.

6.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி குடித்து வந்தோம் என்றால் உடலிலுள்ள வாதம்,பித்தம், கபம் என்ற மூன்று பாதிப்புகளும் குறைந்து உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், உடலின் அமிலத்தன்மையும் கட்டுக்குள் வரும்.

7.செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவதன் மூலம் வயிற்றுக்குள் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அழிகிறது.

8.வயிற்றில் உண்டாகும் புண்கள்,செரிமான பாதிப்புகளை சரி செய்வதோடு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்த உதவுகிறது.

Exit mobile version