பொட்டுக்கடலை சாப்பிடுவதால் இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமா!!?

0
165
#image_title

பொட்டுக் கல்லை சாப்பிடுவதால் இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமா!!?

பொட்டுக் கடலையை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொட்டுக் கடலையை நம் வீட்டில் சட்னி அரைக்க நாம் பயன்படுத்துவோம். இந்த பொட்டுக் கடலையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பொட்டுக் கடலையை நாம் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு இரும்புச்சத்து, தாமிரம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் உள்ளது. இந்த பொட்டுக் கடலையை சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொட்டுக் கடலை சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்…

* பொட்டுக் கடலையை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நமது எலும்புகள் ஆரோக்கியம் அதிகரிக்கின்றது.

* பொட்டுக் கடலையில் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. இதனால் இதை தொடர்ந்து சாப்பிடும் பொழுது நமக்கு ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சரி செய்கின்றது.

* பொட்டுக் கடலையில் இரும்புச் சத்துக்கள் உள்ளது. பொட்டுக் கடலையை நாம் சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கின்றது.

* எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பொட்டுக் கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதன் மூலமாக உடல் எடையை குறைக்கலாம்.

* மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பொட்டுக் கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகின்றது.

* பொட்டுக் கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நம்முடைய குடல் இயக்கம் எளிமையாகின்றது.

* பொட்டுக் கடலையை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது பெண்களுக்கு ஹார்மோன் அளவை ஒழுங்குபடுத்துகின்றது.

* பொட்டுக்கடலையை சாப்பிடும் பொழுது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கலாம்.