Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனைவி சம்பாதிக்கும் நிலையில் ஜீவனாம்சம் பெற முடியுமா!! நீதிமன்றங்கள் சொல்வது என்ன!!

Can I get alimony if my wife earns it? What do the courts say?

Can I get alimony if my wife earns it? What do the courts say?

மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் கணவன் மனைவி விவாகரத்து குறித்தும் கணவன் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவது குறித்தும் முடிவெடுக்கும் பட்சத்தில் மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் எதிர்பார்த்து இருக்கிறார். ஆனால் மனைவியும் சம்பாதிக்கிறார் என்பதால் ஜீவனாம்சம் வழங்க கூடாது என கணவன் வழக்கு தொடுத்திருக்கிறார்.

தற்பொழுது இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், அங்கு கணவன் மனைவி இருவரின் உடைய சிறப்பு விவரங்களையும் விசாரித்த பின் உச்ச நீதிமன்றம் ஆனது மாதாந்திர சம்பள விவரங்களை கணவர் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கில் கணவன் மனைவி மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்றும் சம்பாதிக்கக்கூடிய மனைவிக்கு தான் ஏன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட வழக்கு போட்டு இருக்கிறார். இதனை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் கிழமை நீதிமன்றம் இரண்டும் விசாரித்து கணவர் கூறுவது சரி எனக்கு ஒரே மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டாம் என தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கணவன் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார் என்றும் தன்னைவிட அதிக சம்பளம் பெறுவதால் கணவன் தனக்கு ஜீவனாம்சம் கொடுத்தே தீர வேண்டும் என்றும் மனைவி தற்பொழுது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறார். இந்த மேல்முறையீட்டிற்கான விசாரணையின் பொழுது தான் கணவனினுடைய மாதாந்திர சம்பள வருமான சீட்டு சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகளால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு சம்பள சீட்டு சமர்ப்பிக்கப்பட்ட பின்பு தான் இதற்கான முடிவு வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version