Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் வீடு துடைக்கலாமா..?? பூஜை பொருட்களை சுத்தம் செய்யலாமா..?!

பொதுவாக நல்ல நாட்களில் நமது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே தள்ளக் கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். உதாரணமாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என்பது மங்களகரமான நாள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அத்தகைய நாட்களில் எந்த ஒரு பொருளையும் வெளியே தள்ளக் கூடாது என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு இந்த காலம் வரையிலும், எனது அம்மா சொன்னார்கள் அல்லது மாமியார் சொன்னார்கள் என்று செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாம் வீடு துடைப்பது இல்லை. ஆனால் ஏன் இந்த கிழமைகளில் வீட்டினை சுத்தம் செய்யக்கூடாது என்ற காரணம் நமக்கு தெரிவதில்லை. இருந்தாலும் நாம் அதனை கடைப்பிடித்து வருகிறோம்.

மங்களப் பொருட்களை, மங்கள நாட்களில், மங்களகரமான நேரங்களில் கூட்டி வெளியே தள்ளக் கூடாது என்று தான் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒரு நாள் என்பதற்கான மங்களகரமான நேரம் என்பது சூரியன் உதயம் ஆகின்ற நேரம் தான். அந்த நேரத்தில் நாம் வீடு பெருக்குவது, வீட்டினை சுத்தம் செய்வது, வீடு துடைப்பது இது போன்ற செயல்களை செய்யக்கூடாது.

வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டினை சுத்தம் செய்து கொள்ளலாம். ஒருவேளை செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வீட்டினை சுத்தம் செய்தே ஆக வேண்டும் என்று கூறினால், சூரியன் உதயம் ஆவதற்கு முன்பாகவே சுத்தம் செய்து விட வேண்டும்.

இல்லையென்றால் பூஜை அறையை மட்டும் ஆவது சூரிய உதயத்திற்கு முன்பாக சுத்தம் செய்து விட வேண்டும். இல்லையென்றால் அந்த நாட்களில் வீட்டினை சுத்தம் செய்யக்கூடாது. ஆனால் வாரத்தில் எந்த நாட்களாக இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் வீட்டினை கண்டிப்பாக துடைக்கக் கூடாது.

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை நாட்கள், பௌர்ணமி நாட்கள் இது போன்ற நாட்களில் வீட்டினை சுத்தம் செய்யக் கூடாது. அதற்கு பதிலாக முந்தைய நாளிலே வீட்டினை சுத்தம் செய்து விட வேண்டும். ஏனென்றால் இந்த நாட்கள் அனைத்தும் பூஜை செய்வதற்காக மட்டுமே என ஒதுக்கப்பட்ட நாளாகும். எனவே இந்த நாட்களில் வீட்டினை சுத்தம் செய்வது கூடாது.

இந்த மங்கள நாட்களில் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் பூஜை வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், இந்த நாட்களில் வீட்டினை சுத்தம் செய்யக்கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அதேபோன்றுதான் பூஜை அறையில் உள்ள பூஜை பொருட்களையும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு முன்பாகவே சுத்தம் செய்து வைத்து விட வேண்டும். இல்லையென்றால் சூரிய உதயத்திற்கு முன்பாகவே அந்த பொருட்களை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Exit mobile version