Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மினரல் வாட்டரை சுட வைக்கலாமா? வைத்தால் என்ன ஆகும்?

#image_title

மினரல் வாட்டரை சுட வைக்கலாமா? வைத்தால் என்ன ஆகும்?

மேலைநாடுகளில் சுத்தமான அருவிகளில் இருந்து கிடைக்கும் நீரை சுத்திகரிப்பு செய்து, அதன்பின் அதில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற தாதுப்புக்களான மினரல்களை தேவையான விகிதத்தில் கலந்து பயன்படுத்துகிறார்கள். அதுதான் உண்மையில் மினரல் வாட்டர். அப்படி கிடைக்கிற மினரல் வாட்டரை காய்ச்சிக் குடிக்கக் கூடாது.

சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டரில் நம் உடலுக்குத் தேவையான மினரல்கள், சுத்திகரிக்கப்பட்ட உப்புகள்,தாது உப்புகள் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். அதனை சுட வைத்துக் குடித்தால் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் போய்விடும் என்று பலர் சொல்லுவார்கள்.

இந்நிலையில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் சுட வைக்கும் போது அதில் இருக்கின்ற அளவுக்கு அதிகமான பாஸ்பரஸ் போன்ற உப்புகள் வெளியேறிவிடும். மற்ற எந்தவித சத்துக்களும் அந்த தண்ணீரை விட்டு வெளியேறாது.

பாஸ்பரஸ் வெளியேறினால் இதுவும் சாதாரண குடிநீர் தான். அதனால் சாதாரண நீரை சுட வைப்பது போலவே இந்த சுத்திகரிக்கப்பட்ட நீரையும் சுட வைக்கலாம். அதனால் எந்தவித சத்துக்களும் இந்த தண்ணீரை விட்டு வெளியேறாது.

நமது நாட்டில் செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு முறையும், மற்ற நாடுகளில் செய்யப்படும் சுத்திகரிப்பு முறையும் வெவ்வேறானவை. மற்ற நாடுகளில் இயற்கையாகக் கிடைக்கும் சுத்தமான நீரை சுத்திகரிப்பு செய்தி, அதில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், சோடியம் போன்ற மினரல்கள் தேவையான அளவு கலந்து பயன்படுத்துகின்றனர்.

அந்த நீரை காய்ச்ச தேவையில்லை, அப்படி காய்ச்சினால் அதிலுள்ள அனைத்து மினரல்களும் போய்விடும். நமது நாட்டில் அப்படி இல்லை, அதனால் மினரல் வாட்டர்களை காய்ச்சி வைத்து குடிக்கலாம்.

Exit mobile version