Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேன்சரில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கேன்சர் வருமா? இதை எப்படி அறிந்து கொள்வது?

உலகிலேயே உயிரை பறிக்கும் நோய்களில் இரண்டாவது இடத்தில் கேன்சர் அதாவது புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு வர அதிக வாய்ப்பிருக்கிறது.இதை மீண்டும் வரும் புற்றுநோய் என்று அழைக்கின்றோம்.இந்த மீண்டும் வரும் புற்றுநோய் சிகிச்சை பெற்ற பின்னர் சில மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பிறகு வரலாம்.

கணையப் புற்றுநோய்,இரைப்பை புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,வாய் புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய்,தொண்டை புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கின்றது.இதில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர்.

நுரையீரல் புற்றுநோய் புகைப்பிடிப்பதால் வருகிறது.புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கட்டிகளை அகற்றிய பிறகு மீண்டும் புற்றுநோய் வர அதிக வாய்ப்பிருக்கிறது.நுரையீரல் புற்றுநோய் மட்டுமின்றி எந்தவகை புற்றுநோயாக இருந்தாலும் அவை மீண்டும் வர வாய்ப்பிருக்கிறது.

மீண்டும் வரும் புற்றுநோய்க்கான அறிகுறிகள்:

1)அடிக்கடி தலைவலி உண்டதால்
2)மூச்சுத் திணறல்
3)மலத்தில் இரத்தம் தென்படுதல்
4)கழிக்கும் சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்
5)குமட்டல்
6)வாந்தி உணர்வு
7)எடை இழப்பு
8)தொடர் இருமல்
9)உணவு மற்றும் எச்சில் விழுங்குவதில் சிரமம்

மீண்டும் புற்றுநோய் வர காரணங்கள்:

புற்றுநோய் கட்டிகளை அகற்றும் சிகிச்சையின் போது சிலவகை செல்களை கண்டறிய முடியாமல் போகிறது.இந்த புற்றுநோய் செல்கள் உருமாற்றம் அடைந்து மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

மீண்டும் வரும் புற்றுநோயை கண்டறிய செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள்:

1.இரத்தப் பரிசோதனை

இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை பரிசோதனை செய்யப்படுகிறது.

2.கட்டி மார்க்கர்

ஒருவருக்கு மீண்டும் மீண்டும் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டால் அவர்களுக்கு கட்டி மார்க்கர் பரிசோதனை செய்யப்படும்.

3.இமேஜிங்

இந்த பரிசோதனை மூலம் மீண்டும் புற்றுநோய் வருவதை கண்டறிய முடியும்.இதில் CT,MRI,PET போன்ற ஸ்கேன்கள் செய்யப்படுகிறது.

4.சிறுநீர் பரிசோதனை

மீண்டும் புற்றுநோய் பாதித்தவர்களின் சிறுநீரில் உள்ள இரத்த அணுக்களை அளவிட்டு புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Exit mobile version