Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாமா? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் தமிழக முன்னாள் தலைவரும் தற்போது புதுச்சேரி ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்டோர் தொடர்பாக பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சமூகவலைதளத்தில் அவதூறாக பேட்டி அளித்ததாக ஏராளமான புகார்கள் காவல்துறையில் வழங்கப்பட்டு இருக்கிறது, இது தொடர்பாக பல வழக்குகள் அவர் மீது கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து நாஞ்சில்சம்பத் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் கான்சியஸ் இளங்கோ ,புகார்தாரர் சார்பாக வழக்கறிஞர் அய்யாசாமி, உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

அப்போது நாஞ்சில்சம்பத் தரப்பு வழக்கறிஞரிடம் பிரதமர் உள்ளிட்டோரை மனுதாரர் மோசமாக விமர்சனம் செய்திருக்கிறார், அரசியல் தலைவர்கள் என்றால் என்ன வேண்டுமென்றாலும் பேசிவிடலாமா? அதற்கு ஒரு அளவே கிடையாதா? என்று சரமாரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார் அதன்பிறகு விசாரணையை வருகின்ற 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Exit mobile version