தூக்கமின்மை உயிரையே கொன்றுவிடுமா? படுத்த உடனே தூக்கம் வர சில டிப்ஸ்!!

0
186

தூக்கமின்மை உயிரையே கொன்றுவிடுமா? படுத்த உடனே தூக்கம் வர சில டிப்ஸ்!!

இந்த பதிவில் தூக்கம் வருவதற்கு என்ன செய்யலாம் எது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.

நன்றாக தூங்கினால் ஏற்படும் நன்மைகள்:

ஒவ்வொரு நாளும் சரியாக எட்டு மணி நேரம் நாம் தூங்கினால் மட்டுமே உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். நாம் தூங்கும் போது தான் நமது மூளைக்கு ஓய்வு கிடைக்கும். இவ்வாறு மூளைக்கு நன்றாக ஓய்வு கிடைப்பதனால் அடுத்த நாள் காலையில் நாம் மிகவும் சுறுசுறுப்பாக அந்த நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக காணப்படுவோம்.

இரவு நம் நன்றாக தூங்கும் போது தான் நம் உடம்பில் இருக்கக்கூடிய செரிமான வேலைகளை உடல் செய்யும். சரியான நேரத்திற்கு நாம் தூங்கும்போது தான் நம் உடம்பில் மெலோடின் என்ற சுரப்பி சுரக்கும். இந்த சுரப்பி சுரப்பதனால் உடம்பிற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் அதாவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் இளமை தோற்றத்தை பாதுகாக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும். இந்த சுரப்பி சரியாக சுரக்கவில்லை என்றால் தான் நமக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.

தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்:

நரம்புத் தளர்ச்சி ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படும் மற்றும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும். மேலும் பெண்களுக்கு கரு உருவாவதில் தாமதமாகும், மலச்சிக்கல் பிரச்சனை, உடல் உஷ்ணம் போன்ற பல பிரச்சனைகள் உடலில் ஏற்படக்கூடும். இது மட்டும் இன்றி கண் எரிச்சல், தலைவலி தலை சுற்றல் உடல் சோர்வு ஞாபகம் வருதே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என பலவிதமான பிரச்சனைகள் தூக்கமின்மையால் ஏற்படக்கூடும்.

நன்கு தூக்கம் வர எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:

இரவு சாப்பிட்ட பிறகு பாலின் சிறிதளவு ஏலக்காயை தட்டி போட்டு குடித்து வரலாம். பாலில் ஒரு பின்ச் அளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து குடித்து வரலாம். பாதாம் சாப்பிட்டு வரலாம் ஏனென்றால் சில பேருக்கு இரவு நன்கு சாப்பிட்டுவிட்டு படுத்தாலும் திடீரென்று நடு இரவில் பசி ஏற்படும் அதனால் தூக்கமின்மை ஏற்படும் எனவே இந்த பாதாம் சாப்பிட்டு வர பசி எடுக்காது.

இரவு தூங்குவதற்கு முன்பாக பச்சை காய்கறிகளை சாப்பிட்டு வரலாம் பச்சை காய்கறிகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும். பழங்களில் வாழைப்பழம், செர்ரி பழம், கிவி பழம் போன்றவற்றை சாப்பிட்டு வரலாம். முக்கியமான ஒன்று இரவு சாப்பிட்ட உடனேயே தூங்க கூடாது தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் நடைப்பயணம் மேற்கொண்டு விட்டு பிறகு தான் தூங்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது சாப்பிட்ட உணவு நன்கு செரிமானமடைந்து நன்கு தூக்கம் வரும்.

இரவு 10 மணிக்கு முன்பாகவே தூங்கி விட வேண்டும். இவை அனைத்தையும் நாம் தவறாமல் கடைப்பிடித்து வந்தாலே நன்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.