Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டத்து இளவரசர் கைபட்டால் விளங்குமா?.. பத்து நாள் கூட தாங்காது.. அவரது கைராசி அப்படி – அண்ணாமலை விமர்சனம்!!

பட்டத்து இளவரசர் கைபட்டால் விளங்குமா?.. பத்து நாள் கூட தாங்காது.. அவரது கைராசி அப்படி – அண்ணாமலை விமர்சனம்!!

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்மண்டலமானது வலுப்பெற்ற நிலையில் மாண்டஸ் புயல் உருவாகி சென்னை மற்றும் இதர மாவட்டங்களை பெருமளவு தாக்கியதில் திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் அவரது பிறந்த நாளையொட்டி மெரினாவில் திறந்து வைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாலம் அடியோடு சேதம் அடைந்தது.

இது குறித்து பல கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் பாஜக அண்ணாமலை பொது நிகழ்ச்சியில் இது குறித்து பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது.அதில்,

பட்டத்து இளவரசர் ஒரு கோடி 20 லட்சம் செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாலத்தை திறந்து வைத்துள்ளார் பட்டத்து இளவரசர் கைபட்டால் அது பத்து நாள் கூட வராது என்பது அவரது படத்தை பார்த்தேன் நாம் அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் இவர் கை பட்டு பாலம் திறந்தது நன்றாக செயல்படுமா?

அதுமட்டுமின்றி ஒரு கோடி செலவு என்று இந்த பாலம் கட்டியதற்கு கணக்கு காட்டுகின்றனர் ஆனால் இது ஒரு புயல் மழைக்கு கூட தாங்கவில்லை. அவரவர் சென்னையில் மெட்ராஸ் ஐ வந்து அவதிப்பட்டு வரும் நிலையில் முதல்வருக்கு கழகத் தலைவன் படம் குறித்து தான் பெரும் டென்ஷன் ஹே, இது பற்றி கூட காலையில் நடை பயிற்சி செய்யும் நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சரிடம் படம் பார்த்தீர்களா என்று கேள்வி கேட்டுள்ளார்.

மெட்ராஸ் ஐ வந்து மக்கள் சிரமப்பட்டு இருக்கும் சூழலில் அதுபற்றி விசாரிக்காமல் தனது மகனின் படத்தை பார்த்திரா என்று விசாரித்தது அவருக்கு எதிராக செருப்பு மட்டும் தான் பறக்கவில்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஸ்டாலினுக்கு எதற்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ புதிதாக வரும் படத்தை உடனுக்குடன் பார்ப்பதற்கு நேரம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக அவரது மகன் நடித்த படம் என்றால் போக மனம் இல்லாதவர்களை கூட வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பேருந்தில் டிக்கெட் வழங்குவது போல டிக்கெட் கொடுத்து பார்க்க வைக்கின்றனர்.

இது அனைத்தும் செய்வதற்கு காரணம் பட்டத்து இளவரசரை அரியணையில் ஏற்றத் தான். வரும் 14ஆம் தேதி அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட போகிறது என்று கூறுவது ஸ்டாலினை அமைச்சராக்க போகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி வருகிறார்கள்.

அதற்காக தான் அவரை விளம்பரப்படுத்தி வருகின்றனர். நீங்கள் உங்கள் மகனை அமைச்சராக்குவதற்கு இப்படி எல்லாம் செய்ய தேவையில்லை பதவி கொடுத்து விட்டு போகலாம் இதற்காக மற்றவர்கள் வருத்தப்படும் படி செய்வதால் என்று கேலி கிண்டலுமாக விமர்சனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Exit mobile version