நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்கும் முதல்வரே இப்படிப்பட்ட செயலை செய்யலாமா?
உலகம் முழுவதும் இன்னும் கொரோனா தொற்று கோரதாண்டம் எடுத்து வருகிறத்து. குறிப்பாக தமிழகத்தில் தான் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு பலியாகுபவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுக்க தமிழக முதல்வரும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனிலும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்களை பின்பற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் தினமும் உடல்பயிற்ச்சிக்காக சைக்கிளிங் செய்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல முதல்வர் சைக்கிளிங் செய்து கொண்டிக்கும் வழியில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொன்டார். மேலும் யாஷிகா இந்த புகைப்படத்தை அவரது ட்டுவிட்டார் பக்கத்திலும் வெளியிட்டார்.
இந்த புகைப்படத்தில் முதலவர் மு.க.ஸ்டாலின் மற்றும் செல்பி எடுத்துக் கொண்ட யாஷிகா இருவருமே முககவசம் அணியாததால் அவரின் ரசிகர்கள் கொரோனா தொற்று பிரச்சனை இன்னும் தீராத நேரத்தில் நாட்டின் முதல்வரே இப்படி மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருக்கலாமா? என்ற ஒரே மாதிரியான கேள்வியை கேட்டுள்ளனர். நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்கும் முதல்வரே இப்படிப்பட்ட செயலை செய்யலாமா? என்று தொன்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்கள்.