Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியர்கள் பற்றி அமெரிக்க பிரதமர் இப்படி கூறலாமா?

அமெரிக்காவில் 1969 முதல் 1974 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ரிச்சர்ட்  நிக்சன் வெள்ளை மாளிகையின் தலைவர் எச்.ஆர். ஹால்டேமன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரிச்சர்ட் நிக்சன் இந்தியர்கள் குறித்து தரக்குறைவாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இந்திய பெண்கள் குறித்து ஆபாசமாகவும், இனரீதியாக இந்தியர்களை அவமதிக்கும் வகையிலும் அவர் பேசியிருப்பது தெரியவந்துள்ளது.

உடல் ரீதியாகவும் இந்தியர்களை அவர் விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியர்களை குற்றம் சாட்டியும் ரிச்சர்ட் நிக்சன் பேசியுள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் இந்தியர்கள் மீது எந்த அளவுக்கு வெறுப்பு வைத்திருந்தார் என்பதை இந்த ஆடியோ பதிவு வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version