Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதைக் கூட பொட்டலம் கட்டி விக்கலாமா? அதிர்ச்சியில் ஊர் மக்கள் !!..

இதைக் கூட பொட்டலம் கட்டி விக்கலாமா? அதிர்ச்சியில் ஊர் மக்கள் !!..

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இந்த புகார் சென்றது.

அதன் அடிப்படையில் ஆத்தூர் டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து வீர சாராய வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் கள்ளச்சாராயம் மறைமுகமாக விற்கப்பட்டு வருகின்றது.

ஒரு பகுதியாக சட்ட விரோதமாக இருசக்கர வாகனத்தில் சிறிய சிறிய பாக்கெட்டுகளாக தயாரித்து அதை ஒரு சாக்கு முட்டையில் கட்டி எடுத்து வந்து விற்பனை செய்யும் புகைப்படம் இணையதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் அந்த நபர் கொஞ்சம் கூட பயமில்லாமல் தெருவில் விற்று வருகிறார். இதை அங்கிருந்த சில நபர்கள் வீடியோவாக எடுத்து இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் தலைவாசல் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களைக் கண்டு கொள்ளவில்லை. பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Exit mobile version