Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரோட்டில் செல்பவர் யாரோ ஒருவர் குண்டு வீசியதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா!!? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் பேட்டி!!! 

#image_title

ரோட்டில் செல்பவர் யாரோ ஒருவர் குண்டு வீசியதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா!!? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் பேட்டி!!!
ரோட்டில் யாரோ ஒருவர் போர போக்கில் குண்டு வீசி சென்றால் நாங்கள் பொறுப்பாக முடியுமா என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நேற்று(அக்டோபர்25) தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களின் மாளிகை முன்பு யாரோ ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீசி சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரை தேடிய காவல்துறையினர். உடனடியாக கைது செய்தனர்.
 இந்நிலையில் புதுக்கோட்டியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “யாரோ ஒரு மனநோயாளி பெட்ரோல் குண்டு வீசியதில் திமுக தலைமையிலான தமிழக அரசு எப்படி பொறுப்பாகும்? தமிழக அரசின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அந்த நபர் உடனடியாக கைதும் செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. மனநோயாளி ஒருவர் போட போக்கில் ஆளுநர் மாளிகையின் முன்பு இருக்கும் சாலையில் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளார். இதற்கு என்ன செய்ய முடியும். தமிழக அரசு எவ்வாறு பொறுப்பாக முடியும்.
சிறையில் இருந்து வந்தவர் போர போக்கில் செய்த இந்த செயலுக்கு தமிழக அரசை குற்றம்சாட்டி குறை கூறுவதா? இது நிச்சயமாக  தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயல் தான்.
ஆளுநருக்கு எதிராக எப்பொழுதும் தமிழக அரசு செயல்படாது. மேலும் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வெறுப்புணர்வு காட்டவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக கட்சி பெட்ரோல் குண்டு வீச வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இது போன்ற செயல்களை வைத்து பாஜக கட்சி அரசியல் செய்கின்றது. என்னதான் அரசியல் செய்தாலும் தமிழக மக்களிடம் பாஜக செய்யும் அரசியல் வேலைகள் எடுபடாது. தமிழக ஆளுநருடன் நாங்கள் ஒன்றும் முதல் பேக்கை கடைபிடிப்பது கிடையாது. ஆளுநர் அவர்கள் மாநில பாஜக தலைவர் போல குற்றம் சாட்டினால் அதற்கு பதில் கொடுக்கும் கடமை தமிழக அரசிற்கு உள்ளது” என்று கூறினார்.
Exit mobile version