Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் முட்டை உணவுகள் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

முட்டை புரதம் நிறைந்த பொருள் என்பதை தாண்டி சுவை மிகுந்த உணவு என்பதால் அவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.முட்டையில் புரதம் மட்டுமின்றி தாதுக்கள்,வைட்டமின்கள்,பொட்டாசியம்,வைட்டமின் டி,ஜிங்க் போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது.

முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.முட்டையை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் அதிகமாக பசி ஏற்படுவது கட்டுப்படும்.இதனால் எடை இழப்பு ஏற்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.நன்மைகள் பல கொண்ட முட்டையை அதிகமாக உட்கொண்டால் ஆபத்தாகிவிடும்.

தினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்:

1)உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் முட்டையை அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரித்துவிடும்.கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் முட்டையை உட்கொண்டால் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.

2)இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் முட்டை சாப்பிட்டால் பாதிப்பு அதிகமாகிவிடும்.

3)நீரிழிவு நோயாளிகள் அதிகமாக முட்டை சாப்பிடக் கூடாது.தினமும் முட்டை உணவுகளை சாப்பிட்டால் அஜீர்ணக் கோளாறு ஏற்படும்.

4)வேகவைத்த மஞ்சள் கருவை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும்.எனவே தினமும் முட்டை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

5)அதேபோல் முட்டையில் ஆம்லெட்,கலக்கி,ஆப் ஆயில் போன்ற முட்டை உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.எனவே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் வேகவைத்த முட்டையை சாப்பிடுங்கள்.

Exit mobile version