Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புளித்த உணவுகள் சாப்பிடலாமா? இதனால் குடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா!!

நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அவசியமான ஒன்றாக திகழ்கிறது.உடல் செயல்பாடுகள் நன்றாக இருக்கவும்,செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்படவும் நமது குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்க வேண்டும்.

இந்த நன்மை தரும் பாக்டீரியாக்கள் புளித்த உணவுகள் மூலமே அதிகமாக கிடைக்கிறது.புளித்த உணவுகளை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.நாம் உண்ணும் உணவின் சத்துக்களை முழுமையாக உறிஞ்ச குடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்க வேண்டும்.இதை புளித்த உணவுகள் மூலம் அதிகரிக்கலாம்.

புளித்த உணவுப் பொருட்களில் புரோபயாட்டிக் மற்றும் எம்சைம்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புளித்த உணவுகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

புளித்த உணவு என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது தயிர்தான்.தயிரில் புரோபயாட்டிக் என்ற நல்ல பாக்டீரியா அதிகமாக உள்ளது.தினமும் தயிர் உணவுகளை உட்கொண்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.தயிரில் ஸ்மூத்தி,மோர் போன்றவை செய்து சாப்பிடலாம்.தயிர் கொண்டு தயாரிக்கப்படும் சப்பாத்தி,ரொட்டி,பூரி போன்ற உணவுகள் செரிமானத்தை எளிதாக்கும்.

காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் கிம்ச்சியில் புரோபயாட்டிக் நிறைந்து காணப்படுகிறது.இதை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

கெஃபிர் தானியங்கள் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படும் பொருளாகும்.இவற்றில் தயிரை விட அதிகம் புரோபயாட்டிக் நிறைந்து காணப்படுகிறது.இந்த கெஃபிரை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

நொதித்த சோயா பீன்ஸ் உணவுகளை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.பழங்கள் மற்றும் காய்கறிககள கொண்டு தயாரிக்கப்படும் புளித்த உணவுகளை சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்படும்.

ஊறுகாய்,பார்லியில் செய்யப்படும் உணவுகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.மீன் மற்றும் இறைச்சியில் தயாராகும் புரோபயாட்டிக் உணவுகளை உட்கொண்டால் குடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

Exit mobile version