கருப்பு லேயர் படித்த வெங்காயத்தை சாப்பிடலாமா? இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?
நம் அன்றாட சமையலில் உபயோகிக்கும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம்.நமது உணவின் சுவையை கூட்டுவதில் வெங்காயத்திற்கு முக்கிய பங்கிருக்கின்றது.வெங்காயம் இல்லாத உணவு சுவையாக இருக்காது..உணவின் ருசியை கூட்டும் வெங்காயம் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருக்கின்றது.
நம் நாட்டில் சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம்,பெல்லாரி வெங்காயம்,மலை வெங்காயம் என்று பல வகை வெங்காயங்கள் விளைகிறது.வெங்காயத்தை பச்சை வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
வெங்காயத்தில் நிறைந்திருக்கும் சத்துக்கள்:
1)பொட்டாசியம்
2)கார்போஹைட்ரேட்
3)சோடியம்
4)வைட்டமின் சி,பி6 மற்றும் டி
5)கால்சியம்
6)மெக்னீசியம்
7)இரும்புச்சத்து
வெங்காயத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.உடலில் படிந்து கிடக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க தினமும் ஒரு பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வரலாம்.
இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் வெங்காயத்தில் சில ஆபத்துகளும் நிறைந்திருக்கிறது.ஒரு சில வெங்காயத்தை உரிக்கும் பொழுது அதன் மேல் ஒரு கருப்பு படலம் பரவி இருப்பதை கவனித்திருப்பீர்.சிலர் அதை சுத்தம் செய்யாமல் நறுக்கி சமையலில் சேர்ப்பார்கள்.ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம்.
வெங்காயத்தில் காணப்படும் இந்த கருப்பு படலம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவையாகும்.இந்த வெங்காயத்தை சாப்பிட்டால் பூஞ்சை நோயான மியூகோர்மைகோசிஸ் ஏற்படக் கூடும்.இது நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு பூஞ்சையாகும்.வெங்காயத்தின் மேல் இந்த கருப்பு புள்ளிகள் தென்பட்டால் அதை நன்கு சுத்தம் செய்துவிட்டு சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.அதுவே வெங்காயத்திற்குள் இதுபோன்று கருப்பு பூஞ்சை தென்பட்டால் அதை பயன்படுத்துவதை தவிரக்க வேண்டும்.
கருப்பு பூஞ்சை படர்ந்த வெங்காயத்தை உட்கொள்வதால் குமட்டல்,தலைவலி,வாந்தி,வயிற்று வலி,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.