Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இறந்தவர்கள் படங்களை வீட்டில் மாட்டி வைக்கலாமா!!பித்ரு தோஷம் எதனால் ஏற்படுகிறது!!

Can we hang pictures of the dead in the house!! What causes Pitru Dosham!!

Can we hang pictures of the dead in the house!! What causes Pitru Dosham!!

நமது ஜாதகத்தினை ஜோதிடரிடம் கொடுத்து பார்க்கும் பொழுது ஒரு சிலருக்கு பித்ரு தோஷம் உள்ளது என்று கூறுவார்கள். பித்ரு தோஷம் என்பது நமது குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் இறந்திருந்தால் அவர்களால் நமக்கு தோஷம் ஏற்படும். அது சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி அவர்களால் நமக்கு தோஷம் ஏற்படுவதே பித்ரு தோஷம். இந்த தோஷம் ஏன் ஏற்படுகிறது? இறந்தவர்களின் படத்தை நமது வீடுகளில் மாட்டி வைக்கலாமா? என்பது குறித்த விளக்கத்தினை காண்போம்.
பித்ரு தோஷம் என்பது ஒருவர் இறந்த பிறகு அவருடைய ஆன்மா உடலை விட்டு நீங்கி அதனுடைய புதிய பயணத்தை தொடங்கும். ஏனென்றால் இந்த ஆத்மாவிற்கு இது ஒரு பிறப்பு. இதற்கு முன்பும் ஒரு பிறப்பு இருந்து இருக்கலாம், இதற்கு அடுத்து ஒரு பிறப்பும் இருக்கலாம். இதுவே நமது நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. இவ்வாறு ஆன்மா செல்லும் பொழுது தடையில்லாமல் இருந்தால்தான் அது அடுத்த பிறவியினை எடுக்கும்.
ஆனால் சில சமயங்களில் இந்த ஆத்மாக்களிடம் உள்ள ஏக்கங்கள், பந்தங்கள், சில நிறைவேறாத ஆசைகளினால் அந்த ஆன்மாவினால் அடுத்த பிறவிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனால்தான் அந்த ஆன்மாவின் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் என ஒன்று ஏற்பட்டு விடுகிறது. இறந்த ஆன்மா நமது குடும்பத்தினராகவே இருந்தாலும் கூட, நமது நெருங்கிய உறவாக இருந்தாலும் கூட அவர்களுடைய ஆசைகள், ஏக்கங்கள் நிறைவேறாத பொழுது அந்த ஆன்மா உடலை விட்டு நீங்குவதற்கு சில காலத்தை எடுத்துக் கொள்ளும். அந்த ஆன்மாவின் இத்தகைய வலிகள் தான் நமக்கு தோஷமாக மாறிவிடுகிறது.
இறந்தவர்களின் படத்தை வீடுகளில் வைத்து ஒரு சிலர் வழிபட்டு வருவர். அதிலும் ஒரு சிலர் வீட்டின் ஹாலிலேயே பெரிய படமாக வைத்து வழிபடுவர். அந்த படத்திற்கு தினமும் விளக்கேற்றி, பூ வைத்து அவர்களுடன் ஒரு விதமான ஈர்ப்பை ஏற்படுத்திவிடுகின்றனர். மிகவும் நெருக்கமான உறவாக இருந்தால் அவர்களிடம் தினமும் ஏதாவது ஒன்றை பேசிக்கொண்டோ அவர்கள் உண்ணும் பொழுது இறந்தவர்களின் படத்திற்கு முன்பாகவும் உணவினை வைத்தோ அவர்களின் ஞாபகமாகவே ஒரு சிலர் இருந்து கொண்டிருப்பர்.
இவ்வாறு நமது கண்ணுக்கு எதிரே இறந்தவர்களின் படத்தை மாட்டி வைத்து அவர்களின் ஞாபகமாகவே இருப்பது இறந்தவர்களின் ஆன்மா அடுத்த நிலைக்கு செல்லாமல் தற்போதைய உலகிலேயே அலைந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தி விடுகிறோம். நமது வீட்டு பூஜை அறையில் உள்ள தெய்வங்களுக்கு தினமும் விளக்கேற்றி தீபம் காட்டி வழிபட்டு வருவோம். அவ்வாறு வழிபடுவது இறைவனை நமது வீட்டிற்கு அழைக்க வேண்டும், நமக்கு தேவையான சக்திகளை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த பூஜையினை நாம் செய்வோம்.
அதேபோன்றுதான் இறந்தவர்களையும் நாம் தினமும் வழிபட்டு வருவது இறந்தவர்களின் ஆன்மாவை அடுத்த பிறவிக்கு செல்ல விடாமல் நாம் அழைப்பதற்கு சமம். எனவேதான் பித்ரு தோஷம் என்கின்ற எதிர்மறை ஆற்றல்கள் நமது வீடுகளில் பரவி விடுகிறது. ஆனால் ஒரு சிலர் இறந்தவர் என்னுடைய அப்பாதான் அல்லது கணவர்தான் என்றும் இவர்களால் எங்கள் குடும்பத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் நம்பி வருவர்.
இறந்தவர்களுக்கு வருடா வருடம் திதி கொடுப்பது என்பது வழக்கம். இத்தகைய செயல்களை வருடத்திற்கு ஒருமுறை இறந்தவர்களின் படத்தினை வைத்து, அவர்களின் துணிகளை வைத்து செய்து கொள்ளலாம். ஆனால் தினமும் 24 மணி நேரமும் அவர்களின் படத்தை வீட்டில் மாட்டி வைத்து அவர்களின் நினைவாகவே இருப்பது தான் நாம் நமது இறந்த உறவினருக்கு செய்யக்கூடிய ஒரு துன்பச் செயலாகும். இறந்தவர்கள் நமது மனதிற்கு பிடித்தவர்களாக தான் இருப்பார்கள் எனவே அவர்களின் ஆன்மா நல்ல படியாக செல்ல வேண்டும் என்றால் அவர்களின் படத்தை நமது வீட்டில் மாட்டி வைக்க கூடாது.
ஆனால் அரசியல் தலைவர்கள், வீர தியாகிகள் ஆகியோரின் படத்தை அலுவலகங்களில் மாட்டி வைத்திருப்பர். அது அவர்களின் வீரம் மற்றும் தொழில் புரிந்ததன் அர்த்தமாக அந்த இடத்தில் மாட்டி வைப்பாரே ஒழிய அந்த இடத்தில் யாரும் தினமும் வந்து அவரை எண்ணி வருந்தவோ, கண்ணீர் விடவோ மாட்டார்கள். அவர்களது வருகையை அவர்கள் எதிர்பார்க்கவும் மாட்டார்கள். ஆனால் நமது குடும்பத்தில் இறந்தவர்களின் வருகையை மீண்டும் எதிர்பார்ப்பவராகவே நாம் இருப்போம்.
வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ அவர்களின் படத்தை வைத்து வழிபாடு செய்து விட்டு மீண்டும் ஒரு அறைக்குள் தெரியாத இடத்தில் மறைத்து வைத்து விட வேண்டும். மாறாக அவர்களின் படத்தை வீட்டில் மாட்டி வைத்து அவர்களின் நினைவுகளை நாம் நினைத்துக் கொண்டே இருப்பது இறந்த ஆன்மாவை மீண்டும் மறு பிறவிக்கு செல்ல விடாமல் தடுக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். அவ்வாறு செய்வது மிகவும் தவறும் கூட.

Exit mobile version