Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாழைப்பழத்தை வைத்து டீ போடலாமா!!! அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்!!!

#image_title

வாழைப்பழத்தை வைத்து டீ போடலாமா!!! அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்!!!

வாழைப்பழத்தை வைத்து டீ தயாரித்து குடிக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது அறியாது. ஆனால் வாழைப் பழத்தையும் வைத்து தேநீர் தயாரித்து குடிக்கலாம் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

 

நாம் பல வகையான டீ வகைகளை தற்பொழுது குடித்து வருகிறோம். இஞ்சி டீ, மாசாலா டீ, கிரீன் டீ, செம்பருத்தி டீ, எலுமிச்சை டீ, சுக்கு டீ போன்று பல வகைகளில் டீ தயாரித்து குடித்து வருகிறோம். இதில் ஒவ்வொரு டீயும் நம் உடலுக்கு ஒவ்வொரு நன்மைகளை அளிக்கின்றது.

அதே போல டீ வகைகளில் ஒன்றுதான் வாழைப்பழத்தை டீ ஆகும். இது ஒன்றும் பெரிதான காரியம் அல்ல. வாழைப்பழம் தோலை வெயிலில் காய வைத்து பிறகு அதை பொடியாக்கி செய்வதே வாழைப்பழ டீ ஆகும். இந்த வாழைப்பழ டீயை நாம் குடிக்கும் பொழுது உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றது. அது என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

வாழைப்பழ டீ மூலமாக கிடைக்கும் நன்மைகள்…

* வாழைப்பழ டீயை தயார் செய்து குடிக்கும் பொழுது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறுகின்றது. இதனால் உடல் எடை எளிமையாக குறைகின்றது.

* வாழைப்பழ டீயை மாலை நேரத்தில் குடிப்பது தூக்கத்தை ஊக்குவிக்கும்.

* இது இதயத்தின் ஆரோக்கியத்தை காக்கின்றது.

* வாழைப்பழ டீ அருந்துவதால் இரத்த ஓட்டம் சீராக இருக்கின்றது.

* வாழைப்பழ டீ அருந்துவதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழ டீ எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலமாக செரிமான பிரச்சனை சரியாவது மட்டுமல்லாமல் செரிமான மண்டலமும் மேம்படைகின்றது.

வாழைப்பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் வேக வைத்து சாப்பிடலாம். வேக வைத்தும் சாப்பிட பிடிக்காதவர்கள் இவ்வாறு தேநீர் செய்து குடிக்கலாம். இதனால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது. மேலும் பல பாதிப்புகள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றது.

Exit mobile version