Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இறந்து போன உறவுகளின் உடைகளை பயன்படுத்தலாமா!! அதனால் ஏதேனும் ஆபத்து வருமா!!

Can we use the clothes of dead relatives!! So will there be any danger!!

Can we use the clothes of dead relatives!! So will there be any danger!!

நமக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் இறந்து விட்டால் அவர்களின் ஞாபகார்த்தமாகவும், அவர்களை பிரிய மனம் இல்லாமலும் அவர்களின் பொருள் ஏதேனும் ஒன்றை நாம் உபயோகப்படுத்திக் கொண்டு இருப்போம். அவ்வாறு அவர்கள் விட்டுச் சென்ற பொருளை நாம் பயன்படுத்தலாமா? அல்லது பயன்படுத்தக்கூடாதா? என்பது குறித்து அஸ்ட்ராலஜர் கூறிய விளக்கத்தினை தற்போது காண்போம்.
வயதாகியோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தோ ஒருவர் இறந்து இருந்தால் அவரது உடைமைகளான கட்டில், தலையணை, உண்ணக்கூடிய தட்டு, உடைகள் ஆகிய அனைத்தையுமே அடக்கம் செய்து விடுவார்கள். ஏனென்றால் நோய்வாய்ப்பட்டவர்களின் உடைமைகளை மற்றவர் பயன்படுத்தினால் அந்த தீராத நோயானது மற்றவர்களுக்கும் வந்துவிடும் என்று அக்காலத்தில் இருந்து பெரியோர்கள் தற்போது வரையிலும் அதனை செய்து வருகின்றனர்.
அகால மரணம் அடைந்தவர்கள் அதாவது யாரேனும் ஒருவர் திடீரென ஒரு விபத்தின் மூலம் இறந்து விடுகிறார்கள் என்றால் அவர்களின் உடமைகளை மற்றவர் பயன்படுத்தும் பொழுது அவர்களிடையே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அவ்வாறு இறந்தவர்களின் ஆன்மா விரைவில் சாந்தி அடையாது. எனவே அவர்களின் உடமைகளை மற்றவர் பயன்படுத்தும் பொழுது ஆன்மாவின் ஈர்ப்பை ஏற்படுத்தி விடும். எனவேதான் நமது முன்னோர்கள் இறந்தவர்களின் உடைமைகளை ஆற்றில் விட்டு விட வேண்டும் என கூறுகின்றனர்.
நமது குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடைகளை ஒன்று ஆற்றிலோ அல்லது கடலிலோ விட்டுவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் மற்றவருக்கு கொடுக்காமல் அதற்கு பதிலாக நெருங்கிய உறவான அவரது மகளோ, மருமகளோ பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோன்றுதான் இறந்தவர்களின் வாட்ச், அணிகலன்கள் போன்றவற்றையும் நெருங்கிய உறவுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அகல மரணம் அடைந்தவர்களின் உடைமைகளை பயன்படுத்தாமல் கடலில் விடுவது நல்லது.
தங்க ஆபரணங்கள் ஏதேனும் இருந்தால் அதனை அழித்து வேறொரு ஆபரணமாக மாற்றிக் கொள்வதை விட அதனை ஞாபகார்த்தமாக வீட்டில் வைத்துக் கொள்ளும் பொழுது செல்வ வளம் அதிகரிக்கும் எனவும் அஸ்ட்ராலஜர் கூறுகிறார்.
வயது முதிர்ந்தவர்களோ அல்லது நோய்வாய்ப்பட்டவர்களோ இறந்துவிட்டால் அவர்களின் ஆன்மா ஓரளவிற்கு சாந்தி அடைந்து விடும். ஆனால் அகால மரணம் அடைந்தவர்கள் தனது ஆசை எதுவும் நிறைவேறாமலும், விருப்பமின்றியும் இறந்து இருப்பார்கள். அதனால் அவர்களின் ஆன்மா விரைவில் சாந்தி அடையாது. அவ்வாறு அகால மரணம் அடைந்தவர்களின் ஆசைகளை அக்குடும்பம் நிறைவேற்றி வைப்பதன் மூலம் அந்த ஆத்மாவின் ஈர்ப்புகளில் இருந்து விடுபடலாம்.

Exit mobile version