Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் ஹேர் கட் பண்ணலாமா? இதோ நிபுணர்களின் கருத்து!!

நம் இந்தியா மூட நம்பிக்கைகளுக்கு பெயர் போனது என்று அனைவரும் அறிந்த ஒன்று தான்.பல்வேறு விஷயங்களில் மூட நம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறது.ஏன் எதற்கு என்று தெரியாமல் நாம் மூட நம்பிக்கைகளை கடைபிடித்து வருகின்றோம்.

இதில் ஒன்று தான் கர்ப்ப கால சமாச்சாரம்.பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் செய்ய கூட விஷயங்கள் என்று ஒரு லிஸ்ட் போடும் அளவிற்கு மூட நம்பிக்கைகள் பரவி காணப்படுகிறது.அதற்கு உரிய காரணம் சொல்லப்பட்டாலும் சில விஷயங்கள் தவறானவை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படியான விஷயங்களில் ஒன்று தான் கர்ப்ப காலத்தில் பெண்கள் முடி வெட்டக் கூடாது என்று சொல்லப்படுவது..கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை பொதுவான ஒன்று தான்.இருப்பினும் சில பெண்கள் தங்கள் முடியை பராமரிக்க விரும்புவார்கள்.

முடி வெடிப்பிற்கு கர்ப்பிணி பெண்கள் ஹேர் கட் செய்ய நினைக்கின்றனர்.ஆனால் கர்ப்ப காலத்தில் முடி வெட்டினால் கருச்சிதைவு ஏற்படும் என்ற மூட நம்பிக்கை இருப்பதால் பலரும் முடி வெட்டுவதை தவிர்க்கின்றனர்.

கர்ப்ப காலத்தில் பாதுகாப்பான முறையில் முடி வெட்டுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அதே நேரம் முடிக்கு கலரிங் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்துகின்றனர்.இதனால் கருச்சிதைவு உண்டாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

பெண்கள் ஹேர் கட் செய்வதற்கு முன்னர் தங்கள் மருத்துவரை ஒருமுறை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.கர்ப்ப காலத்தில் அதிக முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் இரும்புச் சத்து,வைட்டமின் நிறைந்த எடுத்துக் கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் முடிக்கு வேதி சேர்மங்களை பயன்படுத்தினால் கருச்சிதைவு அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.நிறைமாதத்தில் தலைக்கு கெமிக்கல் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் எப்பொழுது வேண்டுமாலும் ஹேர் கட் செய்யலாம்.இதனால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.ஆனால் கூட்டம் நிறைந்த இடங்களில் முடி வெட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.தங்கள் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு முடி வெட்ட வேண்டும்.

Exit mobile version