Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களால் இப்படியும் நடிக்க முடியுமா? ராகவா லாரன்ஸை பாராட்டிய சூப்பர்ஸ்டார்!!

#image_title

உங்களால் இப்படியும் நடிக்க முடியுமா? ராகவா லாரன்ஸை பாராட்டிய சூப்பர்ஸ்டார்!!

சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜிகர்தண்டா டபுளெக்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா மற்றும் படக்குழுவினரை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோரது நடிப்பில் கடந்த நவம்பர் 10ம் தேதி ஜிகர்தண்டா டபுளெக்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா டபுளெக்ஸ் திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பார்த்துள்ளார். இதையடுத்து ஜிகர்தண்டா டபுளெக்ஸ் திரைப்படத்தின். படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு , வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். ‘லாரன்ஸால’ இப்படியும் நடிக்க முடியுமா..? என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. ‘5. J. சூர்யா’ இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.

திருவோட கேமிரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டிற்குரியது. ‘திலீப் சுப்ராயனின்’ சண்டை காட்சிகள் அபாரம். ‘சந்தோஷ் நாராயணன்’ வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டு கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும், அற்புதம்.

இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கும் மற்றும் படக்குழுவிற்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version