Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சட்னி சாப்பிட்டு கூட சிறுநீரக கற்களை கரைக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? இது முற்றிலும் அனுபவ உண்மை!

can-you-believe-that-even-eating-chutney-can-dissolve-kidney-stones-this-is-absolutely-empirical-fact

can-you-believe-that-even-eating-chutney-can-dissolve-kidney-stones-this-is-absolutely-empirical-fact

சட்னி சாப்பிட்டு கூட சிறுநீரக கற்களை கரைக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? இது முற்றிலும் அனுபவ உண்மை!

சிறுநீரக பகுதியில் யூரிக் அமிலம்,கால்சியம்,உப்புகள்,தாதுக்கள் ஒன்று சேர்ந்து சிறுநீரக கற்களாக உருவாகிறது.

சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல்,அடி வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படுதல் ஆகியவை சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த சிறுநீரக கற்களை கரைக்க வாழைத்தண்டு சிறந்த தீர்வாக இருக்கிறது.

ஆனால் ஒரு சிலருக்கு வாழைத்தண்டு சாறு பிடிக்காது.எனவே வாழைத்தண்டில் சுவையான சட்னி செய்து சாப்பிட்டு கூட சிறுநீரக கற்களை கரைக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைத்தண்டு
2)வர மல்லி
3)பச்சை மிளகாய்
4)வெங்காயம்
5)பொட்டுக்கடலை
6)புளி
7)தேங்காய்
8)எண்ணெய்
9)கடுகு
10)கறிவேப்பிலை
11)உப்பு
12)மல்லி தழை

செய்முறை:-

ஒரு கப் அளவு வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு 5 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து வரமல்லி 2 தேக்கரண்டி அளவு சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் சின்ன வெங்காயம்,வாழைத்தண்டு,கொத்தமல்லி இலை,பச்சை மிளகாய் மற்றும் துருவிய தேங்காய் 3 தேக்கரண்டி அளவு சேர்த்து வதக்கி எடுக்கவும்.

பிறகு அடுப்பை அணைத்து வறுத்த கொத்தமல்லி,தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு துண்டு புளி சேர்த்து கிளறி ஆற விடவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த வாழைத்தண்டு கலவையை போட்டு ஒரு சுத்து விடவும்.பிறகு 2 தேக்கரண்டி பொட்டுக்கடலை சேர்த்து மைய்ய அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதில் கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரிய விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த தாளிப்பை அரைத்த வாழைத்தண்டு சட்னியில் போட்டு கலக்கவும்.அவ்வளவு தான் சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு சட்னி தயார்.

Exit mobile version