நீங்கள் கடைகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு என வாங்கக்கூடிய பிஸ்கட் மற்றும் லேஸ் போன்ற தின்பண்டங்களுக்கு பின்புறம் எழுதி இருப்பதை பார்க்கும் பொழுது பாமாயில் என்ற ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த பாமாயிலானது ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது, சமையலுக்கு எனவும் உபயோகப்படுத்துகிறோம், அதுமட்டுமின்றி நாம் கடைகளில் வாங்க கூடிய நிறைய பொருட்கள் இந்த பாமாயில் கொண்டு தான் தயாரிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பாமாயிலை சமையலுக்கு பயன்படுத்தலாமா… அது நமது உடல் நிலைக்கு நல்லதா.. என்பதை பற்றி காண்போம்.
உயரத்தில் சிறியதாக இருக்கக்கூடிய பனை மரத்தை தான் ‘செம்பனை’ என்று கூறுகிறோம். அத்தகைய மரத்திலிருந்து வரக்கூடிய பழத்தைக் கொண்டுதான் இந்த பாமாயில் தயாரிக்கப்படுகிறது. அதாவது இந்த பழத்தின் சதைப்பகுதியில் இருந்து தயாரிப்பது தான் பாமாயில் மற்றும் அந்த பழத்தின் உட்புறமுள்ள விதையின் மூலம் தயாரிக்கப்படுவது தான் பால்ம் கேர்னல் ஆயில். இந்த பாமாயிலை உணவுகளுக்கு பயன்படுத்துவோம் அதேபோல் பால்ம் கேர்னல் ஆயிலை அழகு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துவோம்.
இந்த பாமாயிலில் ஃபேட்டி ஆசிட்சை பொறுத்தவரை சேச்சுரேட்டட் ஃபேட் 50%, அன் சாட்சுரேட்டட் ஃபேட்50% என இருக்கும். அதேபோன்று விட்டமின்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் ஐ பொருத்தவரை விட்டமின் E அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த பாமாயில் ஏன் நல்லது இல்லை என்று கூறுகிறார்கள் என்றால் இதில் சேச்சுரேட்டட் ஃபேட் 50% இருப்பது தான். இந்த ஃபேட் ஆனது மனித உடலுக்கு தேவையான ஒன்றுதான். ஏனென்றால் இதுதான் ஆற்றலை சேமிக்கவும், செல்களை உருவாக்கவும் பயன்படுகிறது. பொதுவாக இந்த ஃபேட் ஆனது TRIGLYCERIDES ஆகும்.
அதாவது இதில் மூன்று வகைகள் உள்ளது 1. சேச்சுரேட்டட் ஃபேட் 2. அன் சேச்சுரேட்டட் ஃபேட் 3. டிரான்ஸ் ஃபேட். இதில் அன்சாச்சுரேட்டட் ஃபேட் என்பது மட்டும் தான் உடலுக்கு நல்லது. சேச்சுரேட்டட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் உடலுக்கு நல்லது அல்ல. எனவே இத்தகைய தீங்கு விளைவிக்கக் கூடிய கொழுப்புகளை நாம் உண்ணும் பொழுது கெட்ட கொழுப்புகள் நமது உடம்பில் சேர்கிறது. இந்த தீங்கு விளைவிக்கக் கூடிய கொழுப்பானது நாம் பயன்படுத்தக்கூடிய பாமாயிலில் உள்ளதால் அதனை நாம் தினமும் பயன்படுத்தும் பொழுது ரத்த நாளங்களில் இந்தக் கொழுப்புகள் சிறிது சிறிதாக சேர்ந்து அது நாளடைவில் ரத்த நாளங்களையே அடைத்து விடும். அதை தான் நாம் ஹார்ட் அட்டாக் என்று சொல்கிறோம். எனவேதான் இந்த பாமாயில் இருதய நோய்களை ஏற்படுத்துகிறது என்று கூறுகிறார்கள்.
இந்த சேச்சுரேட்டட் பேட் இருப்பதினால் தான் இந்த பாமாயில் உடலுக்கு நல்லது இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த சேச்சுரேட்டட் ஃபேட் ஆனது நாம் பயன்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெயில் 80%, வெண்ணையில் 51%, நெய்யில் 60%, நல்லெண்ணெயில் 14%, சன் ஃபிளவர் ஆயிலில் 10% என அனைத்து விதமான எண்ணெய்களிலும் இந்த சேச்சுரேட்டட் ஃபேட் உள்ளது.
பாமாயிலை நம் உணவில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதனை எந்த அளவில் எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். எனவே பாமாயிலை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல் குறைந்த அளவில் நமது உணவு பழக்க வழக்கங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.