Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காய்ச்சிய பாலில் வாழைப்பழம் போட்டு சாப்பிடுவதால்.. இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

பசும் பாலில் ஒரு வாழைப்பழத்தை நறுக்கி போட்டு சாப்பிடுவதால் கிடைக்கும் உடல் நன்மைகள் குறித்து தெரிந்தால் நிச்சயம் ஆச்சர்யப்படுவீங்க.பசும் பால் மற்றும் வாழைப்பழம் ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.

வாழைப்பழத்தை நறுக்கி காய்ச்சிய பாலில் போட்டு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பால் ஊட்டச்சத்துக்கள்:

1.புரதம்
2.கால்சியம்
3.வைட்டமின் பி
4.வைட்டமின் டி

வாழைப்பழம் ஊட்டச்சத்துக்கள்:

1.மாங்கனீசு
2.பொட்டாசியம்
3.மெக்னீசியம்
4.நார்ச்சத்து
5.வைட்டமின் பி6
6.ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

பாலில் வாழைப்பழம் போட்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

**தினமும் பாலில் வாழைப்பழம் போட்டு சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.இதில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

**உடல் மெலிந்து இருப்பவர்கள் இந்த பால் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

**பால் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் பலமாக இருக்கும்.தசைகள் வலிமை பெற இந்த வாழைப்பழ பாலை பருகலாம்.

**இந்த வாழைப்பழ பால் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.தொடர்ந்து இந்த பாலை பருகி வந்தால் குடல் இயக்கம் சீராக இருக்கும்.

**உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.பால் பழம் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.

வாழைப்பழ பால் தயாரிக்கும் முறை:

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து பெருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Exit mobile version