இந்த பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெற முடியுமா?அவ்ளோ திறனை பெற்றுள்ளதா?…

0
152

இந்த பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெற முடியுமா?அவ்ளோ திறனை பெற்றுள்ளதா?…

நம் அன்றாட வாழ்வில்
அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. அப்படி குடல் புண்கள்யிருந்தால் ஆறிவிடும். மேலும் தோல் மற்றும் மேனி பளபளக்கும். வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குணமாகும்.

வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும்.நம் முன்னோர்கள் வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அறிவை விருத்தியடையச் செய்யும் என்பார்கள்.
மலை என்கிற வாழைப்பழம் மலச்சிக்கலை போக்கும். பேயன் வாழைப்பழம் அம்மை நோயை குணமாக்கும். பச்சை வாழை உடம்புக்கு குளிர்ச்சி தரும். நேந்திரம் பழம் சருமத்தை பளபளப்பாக்கும். மொந்தன் வாழை உடல் வறட்சியை போக்கும். நாட்டு வாழைப்பழம் குடல் புண்ணை ஆற்றும்.வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண்கள் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மாதவிலக்கு சீராக வரும்.மேற்கூறிய அனைத்தும் வாழைப்பழத்தில் இருக்கும் நன்மைகளாகும்.எனவே இன்றே அந்த பழத்தை தினமும் தவறாமல் சாப்பிடுங்கள்.