Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள்ளங்கை, கால் அரித்தால் பணம் வருமா? பாதிப்பு வருமா? அறிவோம் !!

 

உள்ளங்கை, கால் அரித்தால் பணம் வருமா? பாதிப்பு வருமா? அறிவோம்

 

நமக்கு சில நேரங்களில் உள்ளங்கால், கைகளில் அரிப்பு ஏற்படும். அப்படி ஆகும்போது சிலர் சொல்வார்கள் உள்ளங்கை அரித்தால் பணம் வரப்போகிறது என்று.

 

உண்மையிலேயே நமக்கு உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டால் பணம் கிடைக்குமா? அதனால் நமக்கு என்னென்ன பலன்களால் கிடைக்கும் என்று பார்ப்போம் –

 

வலது காலில் அரிப்பு

 

நமக்கு திடீரென்று வலது பாதத்தில், வலது உள்ளங்காலில் அரிப்பு ஏற்பட்டால் அது அதிர்ஷ்டம். நல்ல விஷங்கள் நமக்கு நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறி. மேலும் சுபகாரியங்கள் நடைபெறும். பயணங்களை நாம் மேற்கொள்வோம். நாம் வகுத்து வைத்த திட்டங்களை செயல்படுத்திவிடும். பணி செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும். நிதி நிலை சீராக இருக்கும்.

 

வலது உள்ளங்கையில் அரிப்பு

 

உங்களின் கை மற்றும் உள்ளங்கைகளில் அரிப்பு ஏற்படுவதன் பலனைத் தெரிந்து கொள்வோம். உங்களின் கை, உள்ளங்கைகளில் அரிப்பு ஏற்பட்டால் அதனால் நல்ல லாபம் அல்லது பண இழப்புடன் தொடர்புடையது.

 

இடது காலில் அரிப்பு

 

நமக்கு இடது கால் மற்றும் பாதம், இடது கைகளில் அரிப்பு ஏற்பட்டால், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். திடீரென்று உங்களுடைய பயணம் தப்பட்டு போகும். பொருள் சேர்க்கையில் எதிர்பாராத இழப்பு வரும்.

 

இடது உள்ளங்கையில் அரிப்பு

 

உங்கள் இடது உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டால், பணம் அதிகமாக செலவழிக்க நேரிடும். இடது கையில் அரிப்பு ஏற்பட்டால் அது உங்களுக்கு ஏற்பட்டுள்ள நோயின் அறிகுறி. ஆதலால் மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள்.

 

குறிப்பு

 

நமக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டால் அது உடல் நல கோளாறால்கூட ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அரிப்புக்கும் வித்தியாசம் உள்ளது. அதனால் அரிப்பு ஏற்பட்டால் ஏதோ நமக்கு பணம் வரும், அதிர்ஷ்டம் வரும் என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.

 

Exit mobile version