ஒரு கிளிக்கில் உள்ளங்கையில் உலகம்! கனரா வங்கி செயல்படுத்தும் சூப்பர் சேவை!

0
143

இந்திய அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக விளங்கி வரும் கனரா வங்கி நாடு முழுவதும் இருக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் எவ்வித சிக்கலும் இல்லாமல் வழங்கி வருகிறது.

அதிலும் குறிப்பாக வங்கிகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் விதத்தில் மொபைல் பேங்கிங் சேவைகளை வழங்கி வருகிறார்கள். இந்த மொபைல் பேங்கிங் செயலியின் மூலமாக வீட்டிலிருந்தபடியே வாடிக்கையாளர்கள் தங்களுடைய கைபேசியை பயன்படுத்தி இணையதளத்தில் பணம் செலுத்துதல், காசோலை புத்தகங்களுக்கான கோரிக்கையை வைப்பது, உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்று வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் கனரா வங்கியின் மொபைல் பேங்கிங் சூப்பர் செயலியான canara ai1 ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த செயலியில் 250க்கும் மேற்பட்ட அம்சங்கள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அனைத்து வங்கி தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்கிறார்கள்.

கனரா வங்கியின் இந்த செயலியை அறிமுகப்படுத்திய பிறகு கனரா வங்கியின் தலைமை செயல் அதிகாரி பிரபாகர் தெரிவித்ததாவது, இன்றைக்கு இருக்கின்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் அனைத்து சமயங்களிலும் அனைத்து பகுதிகளிலும் மின்னலும் பரிவர்த்தனைகளை பயன்படுத்துவதாக தெரிவித்திருக்கிறார்.

வாடிக்கையாளர்கள் தங்களுடைய விரல் நுனியில் வங்கி சேவைகளை பயன்படுத்துவதற்கு வங்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் நிலையில், தற்சமயம் அறிமுகம் செய்திருக்கின்ற இந்த செயலில் பல்வேறு தீம்கள் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்த சமயத்திலும் மொபைல் செயலிகளை பயன்படுத்துவதற்கு ஏதுவாக visual ergonomics உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கிறது.

இது கண் எரிச்சல் எதுவும் இல்லாமல் இரவிலும் வாடிக்கையாளர்கள் திரையை பயன்படுத்துவதை எளிதாக மாற்றி விடுகிறது. நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு லைட்டிங்கை சரி செய்து கொள்ளும் வசதிகள் இருக்கின்றன. குறிப்பாக இந்த புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளால் பேட்டரியின் ஆற்றலை சேமிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக 11 மொழிகள் இந்த செயலில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஷாப்பிங் செய்தல், விமான டிக்கெட் முன்பதிவு, வங்கிகளில் பணம் செலுத்துதல், கடமை திருப்பி செலுத்துதல், மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ், உள்ளிட்டவற்றுக்கு இந்த செயலியின் மூலமாக இணையதளம் வாயிலாக பணம் செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல சுகன்யா சம்ருத்தி கணக்குகள் மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்குகள் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா உள்ளிட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களையும் நாமினி நிர்வாகத்துடன் வழங்குகிறது என்று அந்த வங்கியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை வங்கி கணக்கு இல்லாத பயனர்கள் UPI மற்றும் இந்த செயலியின் மூலமாக ஷாப்பிங் வசதியையும் பயன்படுத்தலாம். வீடியோ kyc மூலமாக உண்மையான சமயத்தில் டிஜிட்டல் முறையில் தங்களுடைய கணக்கை திறக்கும் வசதிகளும் அடங்கியிருக்கிறது. அதோடு இந்த கனரா வங்கியின் செயலியானது உங்களுடைய மொபைல் போனில் இருக்கின்ற சில தட்டல்களில் அனைத்து வேலைகளையும் செய்து விடும் என்று அந்த வங்கி நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலவரத்தினடிப்படையில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த செயலியை பயன்படுத்துவதாகவும், வங்கி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதோடு பிளாக், அண் பிளாக், இன்டர்நெட் பேங்கிங், யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை வரம்புகளை அமைக்கலாம் எனவும், கனரா வங்கி தெரிவித்திருக்கிறது.