மீண்டும் க்யூட் தேர்வுகள் ரத்து! புகார் அளித்த மாணவர்கள்!  

0
168

மீண்டும் க்யூட் தேர்வுகள் ரத்து! புகார் அளித்த மாணவர்கள்!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக க்யூட் தேர்வு என்பது நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட்ட க்யூட் தேர்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த க்யூட் தேர்வானது இந்தியாவில் 259 நகரம் மற்றும் வெளிநாடுகளில் ஒன்பது நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 480 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் ஒரு சில மையங்களில் கடந்த 4 ஆம் தேதி நடைபெறவிருந்த முதல் கட்ட தேர்வு ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இரண்டாம் கட்ட க்யூட் தேர்வு சில மையங்களில் ரத்து செய்யப்பட்டிருந்தது.

மேலும் மழை மற்றும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகளின் காரணமாக கேரளா இடறா நகர பகுதிகளில் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து க்யூட் தேர்வை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் முடிக்க என் டி ஏ திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 30 வரை நீடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நான்காம் கட்ட க்யூட் தேர்வு நேற்று தொடங்கியது இந்த தேர்வில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில் இந்த கட்டத்திலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல மையங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என மாணவர் மத்தியில் புகார் எழுந்து வருகிறது.

இதனையடுத்து டெல்லி குழு ஹர் கோவிந்த் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டெல்லி ஜஸ்ட் லோ பகுதியில் அமைந்துள்ள ஆசிய பசிபிக் நிறுவனம் ,டெல்லி ரங்கோலியில் உள்ள ஆகாஷ் சர்வதேச மேல்நிலைப்பள்ளி, பிதம்புறா விவேகானந்தா தொழில்படிப்புகள் நிறுவனம் ஆகிய தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் தேர்வு எழுதாமல் மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

இந்நிலையில் தேர்வு இரண்டு மணி நேரம் தாமதமான நிலையில் தொடங்கப்பட்டதாக மாணவர்கள் புகார் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது. ஜெகதீஷ் குமார் சில மையங்களில் மட்டும் சர்வர் பிரச்சனை காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத மறு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.