கருணை மதிப்பெண்கள் ரத்து! அனைவருக்கும் ஜூன் மாதம் மறுதேர்வு! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது குறித்து மாணவர்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் நீட் தேய்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை இரத்து செய்யவும் மறு தேர்வு வைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு தேர்வு மையத்தில் அதிக மாணவர்கள் தேர்வு எழுதியதும் மேலும் அவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அது மட்டுமில்லாமல் வினாத்தாள் கசிவானது, விடைத்தாள்களை திருத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் ஆகியவற்றை காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பலரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் அலக் பாண்டே அவர்கள் நீட் தேர்வு எழுதிய 20000 மாணவர்களிடம் கையெழுத்து வாங்கி 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னரே இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. (ஜூன்13) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கும் வருகின்ற ஜூன் 23ம் தேதி மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்ய வேண்டும் என்றும் மறுதேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் இல்லாமல் மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.