கேன்சல் ஆன லியோ ஆடியோ லாஞ்ச்!!! கொந்தளித்த விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க!!!

0
79
#image_title

கேன்சல் ஆன லியோ ஆடியோ லாஞ்ச்!!! கொந்தளித்த விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க!!!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் அதாவது இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கொந்தளித்த விஜய் ரசிகர்கள் அடித்து ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் மகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் மாதம் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த தகவலை லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் எக்ஸ் பக்கம் வாயிலாக அறிவித்தது. இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக டிக்கெட்டுகள் வேண்டும் என்று கோரிக்கை வந்ததாலும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதியும் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக கூறியது.

மேலும் இதில் பின் குறிப்பாக அரசியல் மன அழுத்தங்களுக்காக நாங்கள் இதை செய்யவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து கொந்தளித்த விஜய் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்ட போதும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென்று ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் குணங்கள் இருப்பதாக விஜய் ரசிகர்கள் நினைத்து வருகின்றனர். இதன் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த போஸ்டர் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

விஜய் ரசிகர்கள் பகிர்ந்த அந்த போஸ்டரில் “ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன! ஆட்சியை புடிச்சிட்டா போச்சி!! என்ன நண்பா?” என்ற வாசகங்கள் உள்ளது. தற்பொழுது இந்த போஸ்டர் இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.