தமிழகத்தில் சமீபமாக குழந்தைகளுக்கு எதிரான பல பாலியல் வன்கொடுமைகள் வெளிவந்து வருகின்றன. இக்கொடுமைகளுக்கு காரணமான குற்றவாளிகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்க தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, போக்ஸோ வழக்குகளில் கைதாகும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் விதிமுறைகளின் படி ரத்து செய்யப்படும். குற்றங்களின் ஈடுபவர்களின் மீது அவரவர்களின் துறை ரீதியான ஒழுங்குமுறை நடவடிக்கையும் ஏற்படுத்தப்படும். இனிமேல் கல்வி நிறுவனங்களில் பணிபுரிய போலீசாரின் கண்காணிப்பு சான்றிதழ் ஒப்புதல் வழங்கிடுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் அனைவரும் குழந்தை பாதுகாப்பு ஆவணத்தில் கையெழுத்தும் இடவேண்டும். மேலும் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பாடம் இடம்பெற்றிருத்தல் வேண்டும். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு கல்வி வழங்குதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவியர் பயணம் செய்யும் பள்ளி வாகனத்திலும், இரு பாடல்கள் இணைந்து படிக்கும் பள்ளிகளின் உடற்கல்வி பயிற்சியிலும், கலை நிகழ்ச்சி, பெண் விளையாட்டு போட்டிகள், கல்வி சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளில் பெண் ஆசிரியர்கள் கட்டாயம் நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் விடுதிக்குள் வெளிநபர்கள் அனுமதிக்க கூடாது. விடுதியில் ஏதேனும் வேலை இருப்பின், விடுதி காப்பாளர் அவ்விடத்தில் இருந்து வேலையாட்களை கண்காணிக்க வேண்டும். மாணவர் புகார் பெட்டி கட்டாயமாக ஒவ்வொரு பள்ளியிலும் இடம்பெற்றிருக்க வேண்டும். பாலிய குற்றங்கள் நடந்தால் உடனடியாக பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு கம்ப்ளைன்ட் பதிவு செய்து, குழந்தை பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவித்தல் வேண்டும். குழந்தை பாதுகாப்பு ஹெல்ப்லைன் நம்பர் ஆன 1098, 14417 எழுதப்பட்ட பதாகைகள் கல்வி நிறுவனங்களில் ஆங்காங்கே இடம்பெறுதல் வேண்டும்.